பூஜைக்கு வந்த மலர்
பூஜைக்கு வந்த மலர் (Poojaikku Vandha Malar) 1965 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 12 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்தது இத்திரைப்படம். இத்திரைப்படத்தினை முக்தா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர்.[2][3] ஜெமினி கணேசன், நாகேஷ். முத்துராமன், சாவித்திரி கணேஷ், பண்டரி பாய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு வாலி, ஆலங்குடி சோமு ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர். விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். சீனிவாஸ், கோவிந்தராஜன், ராகவன், சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பாடல்களை பாடியிருந்தனர். கதைச் சுருக்கம்சுரேஷும் ரவியும் நெருங்கிய நண்பர்கள். ஒரு தவறான புரிதலால் பகைவர்களாக மாறுகின்றனர். சுரேஷ், ரவியின் தங்கை சித்ராவை சந்தித்து காதலிக்கிறான். அவள் தன் நண்பர்-பகைவரின் தங்கை என்று அறியாமல் இருக்கிறான். இதை அறிந்த பின், அவன் சித்ராவுடனான உறவை முறித்துக்கொண்டு, அவளை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று சபதம் எடுக்கிறான். அஞ்சாத மனதுடனும், சுரேஷை திருமணம் செய்யும் உறுதியுடனும், சித்ரா அவனுடன் வாழ அவன் வீட்டிற்கு வருகிறாள். இறுதியில் தவறான புரிதல் தெளிவடைகிறது, சுரேஷும் ரவியும் நல்லிணக்கம் அடைகின்றனர். சுரேஷ் சித்ராவை திருமணம் செய்துகொள்கிறான். நடிகர்கள்
படக்குழு
இவற்றையும் பார்க்கவும்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia