தாமரைக்குளம் (திரைப்படம்)
தாமரைக்குளம் 1959 ஆம் ஆண்டு வெளியான இந்திய, தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் சௌகார் ஜானகி, வி. கோபாலகிருஷ்ணன், எம். ஆர். ராதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[2] திரைக்கதைச் சுருக்கம்கிராமத்திலிருக்கும் தாமரைக்குளத்தை அந்த ஊர் மக்கள் பயன்படுத்தக்கூடாதென ஒரு பேராசை பிடித்த ஜமீன்தார் தடை விதிக்கிறார். செல்லையா என்ற இளைஞனின் தலைமையில் அந்த ஊர் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். தனது நண்பன் சேகரிடம் உதவி பெறுவதற்காகச் செல்லையா சென்னைக்குச் செல்கிறான். நடிகர்கள்தி இந்து நாளிதழிலிருந்து எடுக்கப்பட்ட பட்டியல்.[2] தயாரிப்பு விபரம்கல்யாணி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் வெளியீடான தாமரைக்குளம் திரைப்படத்தை கதாசிரியர் எஸ். ஆர். நடராஜனும், ஒளிப்பதிவாளர் எஸ். ஆர். வீரபாகுவும் கூட்டாகத் தயாரித்தனர். முக்தா சீனிவாசன் திரைப்படத்தை இயக்கினார். மயிலாப்பூரில் நடைபெற்ற நாடகமொன்றை சீனிவாசன் பார்த்திருந்தார். அந்நாடகத்தில் நடித்த நாகேஷின் நகைச்சுவை நடிப்பு சீனிவாசனுக்குப் பிடித்திருந்தது. ஆகவே தாமரைக்குளம் படத்தில் நகைச்சுவைப் பாத்திரத்தில் நாகேஷை அறிமுகம் செய்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காக நாகேஷுக்கு ₹2500 ஊதியம் கொடுக்கப்பட்டது. இதுவே நாகேஷுக்கு திரைப்பட அறிமுகமாகவும் அமைந்தது. பாடல்கள்இத் திரைப்படத்துக்கு இசையமைத்தவர்கள்: ஹெச். பத்மநாப சாஸ்திரி, டி. ஏ. மோதி ஆகியோர். பாடல்களை இயற்றியவர் முகவை ராஜமாணிக்கம்.[1] வரவேற்புபெரும்பாலும் உணர்ச்சி மயமான நீண்ட வசனங்கள் பேசும் சிவாஜி கணேசனின் திரைப்படங்கள் போன்ற படங்கள் வெளி வந்த ஒரு கால கட்டத்தில் இடதுசாரி கருத்துகளைக் கொண்ட இத்திரைப்படம் அவ்வளவாக அக்கால இரசிகர்களைக் கவரவில்லை என திரைப்பட ஆய்வாளர் ராண்டார் கை கருத்துத் தெரிவித்துள்ளார். ஆனால் சிறந்த நகைச்சுவை நடிகரான நாகேஷை திரையுலகுக்கு அறிமுகம் செய்த படம் என்ற வகையிலும், பின்னர் வெற்றிப் படங்களைத் தந்த முக்தா சீனிவாசனின் ஆரம்ப காலப் படம் என்ற வகையிலும் இத்திரைப்படம் நினைவு கூரத்தக்கது எனவும் ராண்டார் கை கூறியுள்ளார்.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia