பென்-ஹர் (1959 திரைப்படம்)
பென்-ஹர் (Ben-Hur) திரைப்படம் லியூவ் வாலெஸின் நாவலான பென்-ஹர்:எ டேல் ஆப் கிறைஸ்ட் (1880) இன் திரைப்பட வெளியீடாகும். பதினொரு ஆஸ்கார் விருதுகளை வென்ற திரைப்படங்களான டைட்டானிக் மற்றும் த லோர்ட் ஆப் த ரிங்க்ஸ்:ரிட்டேர்ன் ஆப் த கிங் ஆகிய திரைப்படங்களுடன் இத்திரைப்படமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வகைகதைகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன. யூதா பென் ஹர் யூதனான இவன் ஜெருசலேமின் ஒரு பெரும் பணக்காரனாக விளங்கினான். இவனது சிறுவயது நண்பனான மெசாலா ரோமானியப் போர்த் தளபதியாக பென்ஹரிடம் வந்தான். சந்தித்துக்கொள்ளும் இரு நண்பர்களும் தங்களின் வெவ்வேறு கொள்கைகளினால் பிரிகின்றனர். யூதா தன்னுடைய யூத சமயத்தில் பற்றுள்ளவனாகவும் அதேசமயம் அவனது நண்பனோ உலகத்தினை அடைய வேண்டும் என்ற அவாவுடன் காணப்படுகின்றான். ஒரு சமயம் யூதாவினால் தவறுதலாக தள்ளிவிடப்பட்ட வீட்டின் ஓடு ரோமானிய தலைமைப் பொறுப்பில் இருந்தவனைத் தாக்கிப் பின்னர் அவனது இறப்பிற்கே காரணமாக அமைந்தது. இதனைத் தெரிந்து கொள்ளும் மெசாலா தவறுதலாகத் தான் யூதா அவ்வோட்டினைத் தள்ளியிருப்பான் என்று தெரிந்தும் யூதவைச் சிறையில் அடைக்கின்றான். பின்னர் மெசாலாவை பழி வாங்குவதாகச் சபதம் செய்யும் யூதா பல சிக்கல்களிற்குப்பிறகு கைதியாக்கப்பட்டு அரேபிய நாட்டிற்கு தப்பிச் செல்கின்றான். மேலும் அங்கிருந்த ஒரு அரேபிய மன்னனின் உதவியுடன் குதிரைச் சவாரியில் மெசாலாவை வெற்றி கொண்டு பழி தீர்க்கின்றான். விருதுகள்
|
Portal di Ensiklopedia Dunia