12 இயர்ஸ் எ சிலேவ்
12 இயர்ஸ் எ சிலேவ்(ஆங்கிலம்:12 Years a Slave) 2013 ஆம் ஆண்டில் வெளிவந்த வரலாற்று நாடகத் திரைப்படமாகும். சாலமன் நார்துப் எழுதிய டுவெல்வ் இயர்ஸ் எ சிலேவ் உண்மைக் கதையினைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நியூ யார்க் நகரத்தில் பிறந்த விடுதலைபெற்ற ஆபிரிக்க அமெரிக்கர் ஒருவர் வாசிங்டன் டிசியில் 1841 ஆம் ஆண்டில் கடத்தப்பட்டு அடிமையாக விற்கப்பட்டு லூசியானாவில் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலைப்பெற்றார்.[4] ஸ்டீவ் மெக்குயின் இயக்கிய மூன்றாவது திரைப்படமாகும். சான் ரிட்லி திரைக்கதையினை எழுதியுள்ளார். சிவெடெல் எஜியோபார் சாலமன் நார்துப் ஆக நடித்துள்ளார். மைக்கல் பாஸ்பெந்தர், பெனடிக்ட் கம்பர்பேட்ச், பவுல் டானொ, பவுல் ஜியமாட்டி, லுபிடா நியாங்கோ, சாரா பால்சன், பிராட் பிட், ஆல்பிரி வுட்வர்டு ஆகியோர் நடித்துள்ளனர். 12 இயர்ஸ் எ சிலேவ் வெகுவாகப் பாராட்டுகளைப் பெற்றது. பலராலும் 2013 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமென விவரிக்கப்பட்டது. $20 மில்லியன் செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் ஹாலிவுட்டில் சிறப்பாக ஓடி $187 மில்லியன் வருவாயினை ஈட்டியது. மூன்று அகாதமி விருதுகளைப் பெற்றது: சிறந்த திரைப்படம், நயாங்கோவிற்கு சிறந்த துணை நடிகை, மற்றும் ரிட்லியிற்கு சிறந்த தழுவியத் திரைக்கதை ஆசுக்கர்.[5][6][7] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia