பெரிலியம் புளோரைடு
பெரிலியம் புளோரைடு (Beryllium fluoride) என்பது BeF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெரிலியம் உலோகத்தை தயாரிப்பதற்கு உதவும் முன்னோடிச் சேர்மம் பெரிலியம் புளோரைடு ஆகும். வெண்மை நிறத்தில் நீருறிஞ்சும் திண்மமாகவும் தண்ணீரில் நன்கு கரையக்கூடியதாகவும் இது உள்ளது. இச்சேர்மத்தின் கட்டமைப்பு குவார்ட்சின் கட்டமைப்பை ஒத்திருக்கிறது. ஆல்க்காலில் சிறிதளவு மட்டும் கரைகிறது. பண்புகள்பெரிலியம் புளோரைடு தனித்துவமான ஒளியியல் பண்புகளைக் கொண்டுள்ளது. புளோரோபெரில்லேட்டு கண்ணாடி வடிவத்தில் இத்திண்மம் அறை வெப்பநிலையில் 1.275 என்ற மிகக் குறைந்த ஒளிவிலகல் குறியீட்டு எண் மதிப்பைக் கொண்டுள்ளது. .0093 என்ற மிகக்குறைந்த சிதறல் சக்தியும் 2 × 10 −14 இல் மிகக் குறைந்த நேரியல் அல்லாத குணகம் மதிப்பையும் பெற்றுள்ளது. கட்டமைப்பு![]() திண்மநிலை BeF 2 சேர்மத்தின் கட்டமைப்பு கிறிசுட்டோபலைட்டு கட்டமைப்புடன் ஒத்திருக்கிறது. Be2+ மையங்கள் நான்கு ஒருங்கிணைப்புகள் கொண்ட நான்முகியாகவும் புளோரைடு மையங்கள் இரண்டு ஒருங்கிணைப்புகளும் கொண்டவையாகவும் உள்ளன[6]. கட்டமைப்பிலுள்ள Be-F பிணைப்புகளின் பிணைப்பு நீளம் சுமார் 1.54 Å. ஆகும். SiO 2 கட்டமைப்புக்கு ஒத்ததாக பல தொடர்புடைய கட்டமைப்புகளையும் இதனால் ஏற்கமுடியும். BeF 2 மற்றும் AlF 3 கட்டமைப்புக்கு இடையில் ஓர் ஒப்புமை உள்ளது. இரண்டும் மிதமான வெப்பநிலையில் நீட்டிக்கப்பட்ட கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்கின்றன. வாயுநிலை மற்றும் நீர்மநிலைவாயுநிலை பெரிலியம் புளோரைடு ஒரு நேரியல் கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது, Be-F பிணைப்புகளுக்கு இடையில் 143 பைக்கோமீட்டர் தொலைவு நீளம் காணப்படுகிறது. BeF 2 686 பாகை செல்சியசு வெப்பநிலையில் 10 பாசுக்கல் ஆவி அழுத்தத்தை அடைகிறது. 767 பாகை செல்சியசு வெப்பநிலையில் 100 பாசுக்கல் ஆவி அழுத்தமும் 869 பாகை செல்சியசு வெப்பநிலையில் 1 கிலோபாசுக்கலும் 999 686 பாகை செல்சியசு வெப்பநிலையில் 10 கிலோபாசுக்கலும் 1172 686 பாகை செல்சியசு வெப்பநிலையில் 100 கிலோபாசுக்கல் ஆவி அழுத்தத்தையும் இச்சேர்மம் அடைகிறது[7]. திரவ பெரிலியம் புளோரைடின் 'மூலக்கூறுகள்' ஏற்ற இறக்கமான நான்முகி கட்டமைப்பைக் கொண்டுள்ளன. கூடுதலாக, திரவ BeF 2 இன் அடர்த்தி அதன் உறைநிலைக்கு அருகில் குறைகிறது, ஏனெனில் Be 2+ மற்றும் F - அயனிகள் ஒன்றுடன் ஒன்று மிகவும் வலுவாக ஒருங்கிணையத் தொடங்குகின்றன, இது வாய்ப்பாட்டு அலகுகளுக்கு இடையில் வெற்றிடங்களின் விரிவாக்கத்திற்கு வழிவகுக்கிறது [8]. தயாரிப்புபெரிலியம் தாதுக்களிலிருந்து பெரிலியம் புளோரைடு தயாரிக்கும் செயல்முறையில். தூய்மையற்ற Be (OH) 2 முதலில் உருவாகிறது. இந்த வேதிப் பொருள் அமோனியம் பைபுளோரைடுடன் வினைபுரிந்து அமோனியம் டெட்ராபுளோரோபெரில்லேட்டை கொடுக்கிறது.
டெட்ராபுளோரோபெரில்லேட்டு ஒரு வலுவான அயனி ஆகும், இது பல்வேறு அசுத்தங்களை அவற்றின் ஐதராக்சைடுகளாக வீழ்படிவாக்குவதன் மூலம் அதன் சுத்திகரிப்பை அனுமதிக்கிறது. (NH 4 ) 2 BeF 4 வெப்பப்படுத்தி விரும்பிய விளைபொருள் தயாரிக்கப்படுகிறது.
பொதுவாக புளோரைடுடன் BeF 2 அயனிகளின் வினைத்திறன் SiO 2 உடன் ஆக்சைடுகள் ஈடுபடும் வினைகளுடன் மிகவும் ஒத்திருக்கிறது. பயன்கள்கிராபைட்டு கொள்கலனில் 1300 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு BeF 2 சேர்மத்தை குறைத்தல் வினைக்கு உட்படுத்தினால் உலோக பெரிலியத்தை தயாரிக்க முடியும்.
முக்கியப் பயன்கள்பெரிலியம் புளோரைடு உயிர் வேதியியலில் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக புரத படிகவியலில் பாசுப்பேட்டை இது பிரதிபலிக்கிறது. அடினோசின் டைபாசுப்பேட்டும் பெரிலியம் புளோரைடும் அடினோசின் டிரைபாசுப்பேட்டு தளங்களை ஒன்றாக பிணைக்க முனைகின்றன. புரதத்தின் நடவடிக்கைகள் இதனால் தடுக்கப்படுகின்றன. . புரதங்கள் பிணைப்பு நிலைக்கு படிகமாக மாறுவது சாத்தியமாகிறது. திரவ-புளோரைடு அணு உலைகளில் பயன்படுத்தப்படும் விரும்பத்தகுந்த புளோரைடு உப்பு கலவையின் அடிப்படை அங்கமாக பெரிலியம் புளோரைடு அமைகிறது. பொதுவாக பெரிலியம் புளோரைடுடன் இலித்தியம் புளோரைடு கலந்து ஓர் அடிப்படை கரைப்பான் உருவாகிறது, இதில் யுரேனியம் மற்றும் தோரியத்தின் புளோரைடுகள் சேர்க்கப்படுகின்றன. பெரிலியம் புளோரைடு விதிவிலக்காக வேதியியல் ரீதியாக நிலைப்புத் தன்மை கொண்டுள்ளது. LiF / BeF 2 கலவைகள் ( FLiBe ) குறைந்த உருகுநிலையை கொண்டுள்ளன (360 செ - 459 செ) மற்றும் உலை பயன்பாட்டிற்கு பொருத்தமான புளோரைடு உப்பு சேர்க்கைகளின் சிறந்த நியூட்ரான் பண்புகள். இதற்கு உள்ளன. உருகிய உப்பு அணு உலை சோதனை இரண்டு குளிரூட்டும் சுற்றுகளில் இரண்டு வெவ்வேறு கலவைகளைப் பயன்படுத்தியது. பாதுகாப்புபெரிலியம் சேர்மங்கள் அதிக நச்சுத்தன்மை கொண்டவையாகும். புளோரைடு முன்னிலையில் பெரிலியத்தின் அதிகரித்த நச்சுத்தன்மை 1949 ஆம் ஆண்டிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது [9]. எலிகளில் இதன் உயிர் கொல்லும் அளவு உட்கொள்ளப்பட்டால் கிலோகிராமுக்கு 100 கிராம் ஆகும் நரம்பு ஊசிமூலம் செலுத்தப்பட்டால் கிலோகிராமுக்கு 1.8 மில்லி கிராம் ஆகும். . மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia