பெரிலியம் அயோடைடு
பெரிலியம் அயோடைடு (Beryllium iodide) என்பது BeI2 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். இது நீரை நன்றாக உறிஞ்சும் தன்மை கொண்டது. நீருடன் அதிதீவிரமாக வினைபுரிந்து ஐதரயோடிக் அமிலத்தைத் தருகிறது. தயாரிப்பும் வேதிவினைகளும்பெரிலியம் உலோகம் தனிம புரோமினுடன் 500 பாகை செல்சியசு முதல் 700 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிவதால் பெரிலியம் அயோடைடு கிடைக்கிறது. பெரிலியம் கார்பைடை ஐதரயோடிக்கமிலத்துடன் சேர்த்து வினைபுரிய வைப்பதாலும் பெரிலியம் அயோடைடு தயாரிக்கலாம். பெரிலியம் அயோடைடில் உள்ள அயோடின் மற்ற ஆலசன்களால் எளிதாக இடமாற்றம் செய்யப்படுகிறது. இது புளோரினுடன் வினைபுரிந்து பெரிலியம் புளோரைடு மற்றும் அயோடினின் புளோரைடுகளைத் தருகிறது. மேலும் இது குளோரினுடன் வினைபுரிந்து பெரிலியம் குளோரைடையும் புரோமினுடன் வினைபுரிந்து பெரிலியம் புரோமைடையும் உண்டாக்குகிறது. குளோரேட்டு மற்றும் பெர்மாங்கனேட்டு போன்ற ஆக்சிசனேற்ற முகவர்களுடன் மிகத்தீவிரமாக வினைபுரிந்து அயோடினின் கருஞ்சிவப்பு நிற ஆவியைக் கொடுக்கிறது. திட மற்றும் வாயுரூப பெரிலியம் அயோடைடு காற்றில் எரியும் தன்மை கொண்டவையாகும் [2]. பயன்கள்பெரிலியம் அயோடைடை சூடான தங்குதன் இழையின் மேல் செலுத்தி அதை சிதைவடையச் செய்து மீத்தூய்மை கொண்ட பெரிலியம் தயாரிக்கலாம். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia