மக்னீசியம் புளோரைடு
மக்னீசியம் புளோரைடு (Magnesium fluoride) என்பது MgF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இயற்கையில் செல்லைட் என்ற அரிய கனிமமாக மக்னீசியம் புளோரைடு கிடைக்கிறது. வெண்மை நிறத்தில் படிகவுப்பாக இச்சேர்மம் காணப்படுகிறது. பரவலான அலைநீளமுள்ள எல்லா வகை ஒளிகளுக்கும் ஒளிபுகும் ஊடகமாகச் செயல்படுகிறது. வணிகரீதியாக பல்வேறு ஒளியியல் கருவிகளிலும் விண்வெளித் தொலை நோக்கிகளிலும் மக்னீசியம் புளோரைடு பயன்படுகிறது. தயாரிப்பு மற்றும் அமைப்புமக்னீசியம் ஆக்சைடுடன் அமோனியம் பைபுளோரைடு போன்ற ஐதரசன் புளோரைடு மூலங்களுடன் சேர்த்து வினைப்படுத்துவதால் மக்னீசியம் புளோரைடு தயாரிக்கப்படுகிறது.
மக்னீசியம் புளோரைடு, தொடர்புடைய இரட்டை இடப்பெயர்ச்சி வினைகளில் பங்கேற்கவும் வாய்ப்புள்ளது. நாற்கோண இரட்டை ஒளிவரி படிகமாக மக்னீசியம் புளோரைடு படிகமாகிறது. எண்முக Mg2 + மையங்கள் மற்றும் மூன்று புளோரைடு மைய ஆள்கூறுகள்[2] கொண்ட உரூத்தைல் அமைப்புக்குச் சமமாகத் தோற்றமளிக்கிறது. பயன்கள்ஒளியியல்பரவலான அலைநீளமுள்ள எல்லா வகை ஒளிகளுக்கும் மக்னீசியம் புளோரைடு ஒளிபுகும் ஊடகமாகச் செயல்படுகிறது. இப்புளோரைடால் செய்யப்பட்ட சன்னல்கள், வில்லைகள் மற்றும் முக்கோணப் பட்டகங்களை புற ஊதா 0.120 மைக்ரோ மீட்டர் (μm) முதல் அகச்சிவப்பு 8.0 மைக்ரோ மீட்டர் வரையிலான வீச்செல்லைவரை பயன்படுத்த முடிகிறது. உயர்தரமான செயற்கை வெற்றிடப் புற ஊதாத்தர மக்னீசியம் புளோரைடு மிகவும் விலை உயர்ந்ததாகும். 2007 ஆம் ஆண்டில் இதனுடைய விலை கிலோவுக்கு 3000 டாலர்கள் ஆகும். ஏனெனில் இது மிகக்குறைவாகவே தயாரிக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக, வெற்றிடப் புற ஊதாத்தரம் உள்ளதாகக் கருதப்படும் இலித்தியம் புளோரைடும் பயன்படுத்தப்படுகிறது. வெற்றிடப் புற ஊதாத்தரம் சற்றுக் குறைந்த மக்னீசியம் புளோரைடு சிலவேளைகளில் அகச்சிவப்பு ஒளியில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அது கால்சியம் புளோரைடைவிட தரம் குறைந்ததாகக் காணப்படுகிறது. மக்னீசியம் புளோரைடு உறுதியானது மற்றும் நன்றாக மெருகேற்றவும் வேலைப்பாடுகளுக்கும் உகந்தது. ஆனால் இலேசான இருபக்கச் சிதறல் கொண்டது. எனவே சன்னல் அல்லது வில்லைகளின் தளத்துக்குச் செங்குத்தாக பார்வை அச்சு அமையுமாறு வெட்டிக் கொள்ள வேண்டும்.[2] பொருத்தமான ஒளிவிலகல் எண் 1.37 கொண்ட, மெல்லிய அடுக்கு MgF2 மிகப்பரவலாகப் எதிரொளிப்புத் தடுப்பு பூச்சாகப் பயன்படுத்தப்படுகிறது. 632.8 நானோ மீட்டரில் மக்னீசியம் புளோரைடின் வேடற்று மாறிலியின் மதிப்பு 0.00810 கோணத்துளிகளாகும்[3]. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia