பைரவி கிராமிய நகராட்சி
பைரவி கிராமிய நகராட்சி (Bhairabi Rural Municipality (நேபாள மொழி|भैरवी गाउँपालिका), நேபாளம் நாட்டின் கர்ணாலி மாகாணத்தில் உள்ள தைலேக் மாவட்டத்தில் அமைந்த ஒரு கிராமிய நகராட்சி மன்றம் ஆகும்.[1] இது மாவட்டத் தலைமையிடமான நாராயண் நகருக்கு வடமேற்கே 27.8 கிலோமீட்டர் தொலைவிலும்; கர்ணாலி மாகாணத் தலைநகரான விரேந்திரநகருக்கு வடக்கே 92.5 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இது இமயமலையில் 1359 மீட்டர் உயரத்தில் உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011 நேபாள மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 7 வார்டுகளும்[2], 110.46 சதுர கிலோமீட்டர் பரப்பளவும்.[3] கொண்ட பைரவி கிராமிய நகராட்சியின் மக்கள் தொகை 21,233 ஆகும். இக்கிராமிய நகராட்சியில் நேபாள மொழி 98.6%, குரூங் மொழி 1.1% மற்றும் பிற மொழிகள் 0.1% பேரும் பேசுகின்றனர்.[4]சேத்திரி மக்கள் 32.3%ம் மலைவாழ் பிராமணர்களான பகுணி மக்கள் 15%, காமி மக்கள் 8%, தாக்கூர்கள் 5%, மகர் மக்கள் 4.7%, சர்க்கி மக்கள் 3.8%, தாமி/தோலி மக்கள் 2.5%, சன்யாசி/தசநாமி மக்கள் 2.3%, குரூங் மக்கள் 1.4% மற்றும் இசுலாமியர்கள் 0.4% வாழ்கின்றனர். [5] இந்து சமயத்தினர் 97.3%, இசுலாமியர்கள் 1.4%, பௌத்தர்கள் மற்றும் 1.11% கிறித்தவர்கள் 0.2%.வாழ்கின்றனர். [6]சராசரி எழுத்தறிவு 60.6% ஆக உள்ளது.[7] மீத்தேன் எரிவாயு கண்டுபிடிப்புபைரவி கிராமிய நகராட்சியில் உள்ள ஜல்ஜலே கிராமத்தில் நேபாளத்தின் சுரங்கம் & புவியியல் துறையினரின் மேற்பார்வையில் சீனாவின் புவியியலாளர்கள் 1.12 பில்லியன் கன மீட்டர் மீத்தேன் இயற்கை எரிவாயு இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.[8][9] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia