தைலேக் மாவட்டம்![]() தைலேக் மாவட்டம் (Dailekh District) (நேபாளி: दैलेख जिल्ला;ⓘ) மத்திய மேற்கு நேபாளம் நாட்டின், கர்ணாலி மாகாணத்தில் அமைந்த பத்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் பேரி மண்டலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் நாராயண் நகராட்சி ஆகும். தைலேக் மாவட்டம் 1,502 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 2,61,770 ஆகும்.[1]நேபாள மொழி இம்மாவட்ட மக்களால் அதிகம் பேசப்படுகிறது. மீத்தேன் எரிவாயு கண்டுபிடிப்புஇம்மாவட்டத்தின் பைரவி கிராமிய நகராட்சியில் உள்ள ஜல்ஜலே கிராமத்தில் நேபாளத்தின் சுரங்கம் & புவியியல் துறையினரின் மேற்பார்வையில், சீனாவின் புவியியலாளர்கள் 1.12 பில்லியன் கன மீட்டர் மீத்தேன் இயற்கை எரிவாயு இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.[2][3] புவியியல் மற்றும் தட்ப வெப்பம்இமயமலையில் அமைந்துள்ள இம்மாவட்டம் நான்கு வகைப்பட்ட உயரங்களில் அமைந்துள்ளதால், மாவட்டத்தின் தட்ப வெப்பம் அதற்கேற்ப மாறுபடுகிறது.7
கிராம வளர்ச்சி மன்றங்கள் மற்றும் நகராட்சி மன்றங்கள்![]() இம்மாவட்டம் ஒரு நகராட்சியும், 57 கிராம வளர்ச்சி மன்றங்களையும் கொண்டுள்ளது. இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia