மனே கரிஞ்சா தேசிய விளையாட்டரங்கம்
எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா (அ) மனே கரிஞ்சா தேசிய விளையாட்டரங்கம் (Estádio Nacional Mané Garrincha),[1] பிரேசில் நாட்டின் பிரசிலியா நகரிலுள்ள பல்-பயன்பாட்டு விளையாட்டரங்கம் ஆகும். தற்போது, கால்பந்துப் போட்டிகளுக்காக பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதன் பார்வையாளர்கள் கொள்ளளவு 70,064 ஆகும்; 1974-ஆம் ஆண்டில் இந்த விளையாட்டரங்கம் திறக்கப்பட்டது.[2] முன்னாள் பிரேசிலிய கால்பந்து வீரரான கரிஞ்சா அவர்களின் பெயரில் இந்த விளையாட்டரங்கம் வழங்கப்படுகிறது. அயர்டன் சென்னா பல்விளையாட்டு அரங்கின் ஒரு பகுதியான இவ்விளையாட்டரங்கம், புணரமைக்கப்பட்ட பின்னர், 2013 கால்பந்துக் பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிக்காக மே 18, 2013, அன்று திறந்துவைக்கப்பட்டது. கூட்டரசு மாவட்டத்தின் விளையாட்டு, உடற்கல்வி மற்றும் பொழுதுபோக்குத் துறை, எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா விளையாட்டரங்கின் உரிமையாளர் ஆகும். பிரேசில் அணிக்காக விளையாடி 1958 மற்றும் 1962 ஆண்டுகளில் கால்பந்து உலகக்கோப்பைகளை வென்ற மனே கரிஞ்சா அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் அவர் பெயரில் இவ்விளையாட்டரங்கம் வழங்கப்படுகிறது. குறிப்புதவிகள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia