மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் (Leader of the Opposition in Rajya Sabha- IAST: ராஜ்ய சபா Rājya Sabhā ke Vipakṣa ke Netā ) என்பவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையில் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியை வழிநடத்தும் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆவார். இவர் ஆட்சியில் இல்லாத மாநிலங்களவையில் உள்ள மிகப்பெரிய அரசியல் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் ஆவார். வரலாறுமாநிலங்களவையில் 1969 வரை, எதிர்க்கட்சித் தலைவர் பதவி நடைமுறையில் மட்டுமே இருந்தது மற்றும் முறையான அங்கீகாரம், தகுதி அல்லது சிறப்புரிமை எதுவும் இல்லை. பின்னர், எதிர்க்கட்சித் தலைவருக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவரின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் சட்டம் 1977 மூலம் நீட்டிக்கப்பட்டது. அப்போதிலிருந்து, மாநிலங்களவை தலைவர் மூன்று நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும், அதாவது,
திசம்பர் 1969-ல், காங்கிரசு கட்சி பாராளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. இதன் தலைவராக சியாம் நந்தன் மிசுரா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். சியாம் நந்தன் பிரசாத் மிசுரா பதவிக் காலம் முடித்த பின்னர் எம். எஸ். குருபாதசுவாமி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், குருபாதசாமி நியமனம் குறித்து முறையான அறிவிப்பு ஏதுவுமின்றி பதவி வகித்தார். செயல் மற்றும் பொறுப்புகள்எதிர்க்கட்சித் தலைவர் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக உருவாக்கப்பட்ட அரசாங்கக் கொள்கைகளை அலசிப் பார்க்கிறார். இதன் மீது தேவை என்றால் விவாதத்தைக் கோருவார். இத்தகைய கொள்கை மீதான விவாதங்களை ஆளும் கட்சி தவிர்க்க முயன்றால் அரசாங்கத்தை விமர்சிக்கிறார். தேசியப் பாதுகாப்புக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும்போது, நாட்டின் வெளிநாட்டு உறவுகள் மற்றும் வர்த்தகம் குறித்தும் விவாதிக்க வழிவகுக்கின்றார்.[1][2] சலுகைகள் மற்றும் சம்பளம்எதிர்க்கட்சித் தலைவர் அரசின் கொள்கைகளிலும், ஆளும் கட்சியால் செயல்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்கப் பங்கு வகிக்கின்றனர். சில நேரங்களில், எதிர்க்கட்சித் தலைவர்கள் நாட்டின் தேசியப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்து அரசிடம் கேள்வி எழுப்புகின்றனர்.[3] 1977ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டம் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கென தனிச் சட்டம் இயற்றிய பிறகு, சம்பளம் அதிகரிக்கப்பட்டது.[4] மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர்கள் பட்டியல்பின்வரும் உறுப்பினர்கள் மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்தனர்.
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia