முதலாம் வாசுதேவன் (Vasudeva I) ஒரு குசானப் பேரரசர்களில் கடைசி அரசராக இருந்தார். [3]கனிஷ்கரின் சகாப்தத்தின் பொ.ச. 64 முதல் 98 வரையிலான பெயரிடப்பட்ட கல்வெட்டுகள் இவரது ஆட்சி குறைந்தது பொ.ச.191 முதல் 232 வரை நீட்டிக்கப்பட்டிருந்ததாகக் கூறுகின்றன. இவர் வட இந்தியா, நடு ஆசியப் பகுதிகளில் ஆட்சி செய்தார். அங்கு இவர் பல்கு ( பாக்திரியா ) நகரில் நாணயங்களை அச்சிட்டார். சாசானியர்களின் எழுச்சியையும், இவரது பிரதேசத்தின் வடமேற்கில் குசான-சசானியர்களின் முதல் படையெடுப்புகளையும் இவர் சமாளிக்க வேண்டியிருந்தது.
இவரது முன்னோடியான குவிஷ்கனின் கடைசியாக பெயரிடப்பட்ட கல்வெட்டு, கனிஷ்கர் சகாப்தத்தின் (187 பொ.ச.) 60 ஆம் ஆண்டில் இருந்தது. மேலும் அவர் 229 பொ.ச.வின் பிற்பகுதியில் ஆட்சி செய்ததாக சீனச் சான்றுகள் தெரிவிக்கின்றன.
சீனாவுடனான தொடர்புகள்
சீன வரலாற்று நாளேடான சங்கூழியில் இவர் பொ.ச.229-இல் சீனப் பேரரசர் காவ் ரூயிக்கு காணிக்கை அனுப்பியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர், கடைசி குசான ஆட்சியாளர் என சீன ஆதாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளார்.[4]நடு ஆசியாவிலிருந்து சீன சக்தி பின்வாங்கும் போது இவரது ஆட்சி எழுச்சி கண்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள அதிகார வெற்றிடத்தை இவர் நிரப்பியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இக்காலத்தில் நடு ஆசியாவில் தர்மகுப்தக பௌத்தக் குழுவின் பெரும் விரிவாக்கமும் இந்த நிகழ்வோடு தொடர்புடையது.
நாணயம்
வாசுதேவரின் நாணயங்கள் தங்கத் தினார், கால் தினார், செப்பு நாணயங்களைக் கொண்டிருந்தன. கனிஷ்கர் மற்றும் குவிஷ்கரின் நாணயங்களில் காட்டப்பட்ட தெய்வங்களின் உருவங்களை இவர் கிட்டத்தட்ட முழுவதுமாக அகற்றினார். மாவோ மற்றும் நானாவின் உருவங்களைக் கொண்ட சில நாணயங்களைத் தவிர, வாசுதேவரின் அனைத்து நாணயங்களிலும் உள்ள கடவுள் பொதுவாக சிவன் என்று அடையாளம் காணப்படுகிறது. இதன் பின்பகுதியில் ஓசோ என்ற ஒரு தெய்வம் காணப்படுகிறது.[1] முன்புறத்தில், வாசுதேவர் கனிஷ்கரின் அரச உருவத்தை நிலைநிறுத்துகிறார். தனது கையில் திரிசூலத்தை வைத்திருப்பது போல தனது உருவத்தை அமைத்தார். மற்றொரு திரிசூலம் சில நேரங்களில் சிறிய பலிபீடத்தின் மீது சேர்க்கப்பட்டுள்ளது. தனது ஆட்சியின் முடிவில், வாசுதேவன் தனது நாணயத்தில் நந்திபாத சின்னத்தை (காளையின் குளம்பு) அறிமுகப்படுத்தினார்.()[5][6]
வடமேற்கில் சாசானியப் படையெடுப்பு
வடமேற்கு இந்தியா வரையிலான சசானியர்களின் படையெடுப்பாலும் சுமார் பொச. 240- இலிருந்து குசான-சாசானியர்கள் அல்லது குசானர்களால் இவரது ஆட்சி முடிவுக்கு வந்தது.[7] வாசுதேவன் பாக்திரியாவின் பிரதேசத்தை அதன் தலைநகரான பல்குவில் முதலாம் அர்தாசிர் என்ற குசான அரசனிடம் இழந்திருக்கலாம். அதன்பிறகு, குசான ஆட்சி அவர்களின் கிழக்குப் பகுதிகளான மேற்கு மற்றும் மத்திய பஞ்சாபில் கட்டுப்படுத்தப்பட்டது.
சுமார் 230-245 பொ.ச. குசான-சாசானிய ஆட்சியாளர் முதலாம் அர்தாசிர் குசானனால் வெளியிடப்பட்ட முதலாம் வாசுதேவனின் நாணயத்தின் பிரதிபலிப்பு.[8]
முதலாம் பெரோசு குசானனின் (246-275 பொ.ச.) தங்க நாணயம், முதலாம் வாசுதேவனின் வடிவமைப்பைப் பின்பற்றி, பல்குவில் அச்சிடப்பட்டது.[9]
சிலை
வாசுதேவனின் ஒப்பீட்டளவில் அமைதியான ஆட்சியானது ஒரு முக்கியமான கலைத் தயாரிப்புகளால் குறிக்கப்படுகிறது. குறிப்பாக சிற்பங்களில். [10] பல பௌத்தச் சிலைகள் வாசுதேவரின் ஆட்சி காலத்தைச் சேர்ந்தவை. மேலும் பௌத்தக் கலையின் காலவரிசைக்கு முக்கியமான சான்றுகளாகும்.
முதலாம் வாசுதேவனின் ஆட்சி காலத்தைச் சேர்ந்த சிலைகள்
அஸ்த்நகர் புத்தர், "ஆண்டு 384" என்று பொறிக்கப்பட்டுள்ளது (அநேகமாக யவன சகாப்தம்), எனவே 209 பொ.ச.[11] The inscription reads in the கரோஷ்டி எழுத்துமுறை: sam 1 1 1 100 20 20 20 20 4 Prothavadasa masasa divasammi pamcami 4 1 ("In the year 384, on the fifth, 5, day of the month Prausthapada").[12] The pedestal was sawed off from the body of the statue by L. White King in 1883 and brought to the British Museum.[13]பிரித்தானிய அருங்காட்சியகம்
மதுரா அருங்காட்சியகத்தில் இருக்கும் புத்தர் சிலையின் அடிப்பகுதியில் உள்ள கல்வெட்டு முதலாம் வாசுதேவரைப் பற்றிக் கூறுகிறது: "மகாராஜா தேவபுத்திர வாசுதேவரின் 93 வது ஆண்டில்..." எனத் தொடங்குகிறது. இது 171 பொ.ச. அல்லது 220-க்கு ஒத்ததாக இருக்கலாம். கனிஷ்கர் சகாப்தம் 127 இல் தொடங்கியது. [15] ஓரளவு பாதுகாக்கப்பட்ட சாக்யமுனி சிலை, "ஆண்டு 94" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இது வாசுதேவனைப் பற்றி குறிப்பிடவில்லை. [16]
மதுராவில் கண்டுபிடிக்கப்பட்ட சைன சிலையிலும் வாசுதேவனின் பெயரில் உள்ள பிரதிஷ்டைகள், தேதிகளுடன் காணப்படுகின்றன. [17][18]
Falk, Harry (2001). "The yuga of Sphujiddhvaja and the era of the Kuṣâṇas." Silk Road Art and Archaeology VII, pp. 121–136.
Falk, Harry (2004). "The Kaniṣka era in Gupta records." Harry Falk. Silk Road Art and Archaeology X, pp. 167–176.
Sims-Williams, Nicholas (1998). "Further notes on the Bactrian inscription of Rabatak, with an Appendix on the names of Kujula Kadphises and Vima Taktu in Chinese." Proceedings of the Third European Conference of Iranian Studies Part 1: Old and Middle Iranian Studies. Edited by Nicholas Sims-Williams. Wiesbaden. Pp, 79-93.