முளுபாகிலுமுளுபாகிலு (Mulbagal) ஒரு நகரம் மற்றும் முளுபாகிலு வட்டத்தின் தலைமையகம் ஆகும். இது, இந்தியா கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தேசிய நெடுஞ்சாலை 4 க்கு அப்பால் மாநிலத்தின் கிழக்கு திசையாகவும், ஒரு மலை அடையாளமாகவும் உள்ளது. சொற்பிறப்பு"முளுபாகிலு" என்பது முடளபாகிலு என்ற வார்த்தையிலிருந்து வந்தது, இதன் பொருள் பூர்வீக கன்னட மொழியில் "கிழக்கு கதவு" என்று கூறப்படுகிறது. முளுபாகிலு, மைசூரு மாநிலத்தின் கிழக்கு எல்லையாக (அதன் மூலம் நுழைவாயிலாக) கருதப்படுகிறது. வரலாறுமகாபாரதப் போருக்குப் பிறகு இங்குள்ள அனுமந்த கோயில் பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனனால் எவ்வாறு நிறுவப்பட்டது என்பதை ஒரு புராணம் விவரிக்கிறது. வசிட்ட முனிவர் பிரதான தெய்வமான சீனிவாசன், பத்மாவதி மற்றும் ராமர் - சீதா - லட்சுமணர் சிலைகளை நிறுவியதாக நம்பப்படுகிறது. முளுபாகிலுவின் வரலாற்றை பெஞ்சமின் லூயிஸ் ரைஸ் தனது "மைசூரின் வர்த்தமானி" (1887) என்ற புத்தகத்தில் தொகுத்துள்ளார்.[1][2] நவீன வரலாற்றில், முதல் ஆங்கிலோ-மைசூர் போரின் போது, 1768 அக்டோபர் 4 அன்று முளுபாகிலு போரின் தளமாக, முளுபாகிலு நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலவியல்முளுபாகிலு, 13°10′N 78°24′E / 13.17°N 78.4°E அமைந்துள்ளது.[3] இதன் சராசரி உயரம் 827 மீட்டர் (2,713 அடி) ஆகும். புள்ளி விபரம்2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[4] முளுபாகிலுவின் மக்கள் தொகை 44,031 ஆகும். ஆண்கள், மக்கள் தொகையில் 51 சதவீதமாகவும், பெண்கள் 49 சதவீதமாகவும் உள்ளனர். முளுபாகிலுவின் சராசரி கல்வியறிவு விகிதம் 61% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். ஆண் கல்வியறிவு 67%, பெண் கல்வியறிவு 54% ஆக உள்ளது. முளுபாகிலுவில், மக்கள் தொகையில் 14 சதவீதம் 6 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். பொருளாதாரம்இங்கு, வேளாண்மை, பால், பட்டு வளர்ப்பு, மலர் வளர்ப்பு மற்றும் சுற்றுலா தொடர்பான தொழில்களில் முக்கிய வேலைவாய்ப்பு ஆதாரங்கள் உள்ளன. முலபாகிலு விவசாயிகள் ஆழ்துளை கிணற்று நீரையே பாசன மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்கு நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. முளுபாகிலு நகரம், பல புகழ்பெற்ற கோயில்களின் தாயகமாக உள்ளது. மேலும் இது "கோயில் இடங்களின்" நிலம் என்று பிரபலமாக அறியப்படுகிறது. பல போக்குவரத்து மற்றும் பயண வணிகங்கள் இங்கு தங்கள் தளத்தை அமைத்துள்ளன. முளுபாகிலுவில் உருளைக்கிழங்கு, தக்காளி (வடஹள்ளியில்), கத்திரிக்காய், பீன்ஸ், பீட்ரூட், கேரட், சவ்-சவ் மற்றும் முட்டைக்கோஸ் உள்ளிட்ட பல பருப்பு மற்றும் காய்கறி வர்த்தக சந்தைகள் உள்ளன. முளுபாகிலு வட்டத்தில் ஒரு கருங்கல்(பாறை) தொழிற்துறை மையத்திற்கு அரசாங்கம் முன்மொழியப்பட்ட ஆரம்ப கட்டத்தின் ஒரு பகுதியாக இப்பகுதி உள்ளது. கர்நாடக மாநில அரசு தொழில்துறை மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக விவசாய சாரா நிலங்களை கையகப்படுத்தியது. முளுபாகிலு புகையிலை மற்றும் பீடி நன்கு அறியப்படுகிறது. பல விளம்பர பெயர்களில் பீடிகள் தயாரிக்கப்பட்டு கர்நாடகா மற்றும் ஆந்திராவிற்கு விநியோகிக்கப்படுகின்றன. முஸ்லிம் சமூகம் பெரும்பாலும் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளது. இந்த நகரத்தில் மலையேற்ற பயிற்சிக்கு, பல மலைகள் உள்ளன.[5][6] குறிப்பிடத்தக்க நபர்கள்டி.வி. குண்டப்பா பிரபலமாக டி. வி. ஜி. என அழைக்கப்படும், ஒரு முக்கிய கன்னட எழுத்தாளர் மற்றும் ஒரு தத்துவவாதி ஆவார். அவர் வசனங்களின் தொகுப்பான மங்கு திம்மனா காகாவுக்கு புகழ் பெற்றவர். என். வெங்கடாச்சலா : நெஞ்சே கவுடா வெங்கடாச்சலா ஒரு ஓய்வுபெற்ற இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் முன்னாள் லோக்ஆயுக்தா ஆவார். கருநாடகம் மாநிலத்தின், கன்னட மொழியில் ஆளுநர் சத்தியப்பிரமாணம் செய்து, கன்னட மொழியில் பதவியேற்ற நான்கு லோகாயுக்தாக்களில் இவர் முதலாதவதாக பதவி ஏற்றவர். சவுந்தர்யா கன்னட, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள படங்களில் தோன்றிய தென்னிந்திய திரையுலகில் வெற்றிபெற்ற திரைப்பட நடிகை ஆவார். அவர் 90 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். அவற்றில் பெரும்பாலானவை தெலுங்கில் வெளிவந்த திரைப்படங்களாகும். பெங்களூரு அருகே நடந்த விமான விபத்தில் அவர் கொல்லப்பட்டார். உணவுகோலார் மாவட்டத்தில் உள்ள முளுபாகிலு நகரத்தில் இருந்து ஒரு சமையல்காரரை முன்னாள் முதலமைச்சர் பி. எஸ். எடியூரப்பா 2012 இல், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தோசை மற்றும் இட்லிகளை தயார் செய்வதற்கு வரவழைத்தார் எனவும், "முளுபாகிலு பாணியில் தயாரிக்கப்பட்ட தோசை மற்றும் இட்லிகள் மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது." [7] குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia