மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டு (Moongilthuraipattu) இந்தியா, தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டத்தில் சங்கராபுரம் தாலுகாவில், அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இது தென்பெண்ணை கரையில் (தென்பெண்ணை ஆறு) மீது அமைந்துள்ளது. இவ்வூர் மாநில நெடுஞ்சாலை SH-6 இணைக்கும் திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி சாலையில் உள்ளது. இக்கிராமத்தில் ஒரு சர்க்கரை ஆலை உள்ளது. அது தமிழ்நாடு சர்க்கரை கழகம் லிமிடெட் மூலம் நிறுவப்பட்டது. சர்க்கரை மற்றும் கரும்பு சார்ந்த விவசாயம் இக்கிராமத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது. சர்க்கரை ஆலைஇக்கிராமத்தில் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை (KCSM) புகழ்பெற்றது. ஆலை மற்றும் அதன் தொடர்புடைய தொழில் முக்கிய வருமான ஆதாரமாக உள்ளது. இச்சர்க்கரை ஆலையானது பெப்ரவரி 12, 1967 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன் அசல் அரைக்கும் திறன் 1000 TCD. பின்னர் இச்சர்க்கரை ஆலையை விரிவுபடுத்தப்பட்டு ஜூலை 1, 2009 அன்று அதன் அரைக்கும் திறன் 2500 TCD ஆக மாற்றம் செய்யப்பட்டது.[1] கல்வி நிறுவனங்கள்இக்கிராமத்தின் தெற்குப் பக்கத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியும், வடக்குப் பக்கத்தில் சர்க்கரை ஆலைக்குச் சொந்தமான கே. சி. எஸ். எம் மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளியும் உள்ளன.
வங்கிகள்
ஏடிஎம்
போக்குவரத்துஇக்கிராமத்தின் மிக அருகில் உள்ள ரயில் நிலையம் திருவண்ணாமலை ரயில் நிலையமாகும். இது 22 கி.மீ தொலைவில் உள்ளது, இவ்வூர் மாநில நெடுஞ்சாலை SH-6 இணைக்கும் திருவண்ணாமலை மற்றும் கள்ளகுறிச்சி சாலையில் உள்ளது. திருக்கோவிலூர், செங்கம் மற்றும் சாத்தனூர் அணை ஆகிய இடங்களை இணைக்கும் குறுகிய பாதைகள் உள்ளன. சுற்றுலாகுறிப்புகள் |
Portal di Ensiklopedia Dunia