சங்கராபுரம்
சங்கராபுரம் (ஆங்கிலம்:Sankarapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் வட்டம் மற்றும் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். சங்கராபுரம் நகரம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. அமைவிடம்சங்கராபுரம் பேரூராட்சி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது.இதன் கிழக்கில் திருக்கோவிலூர் 35 கி.மீ.; மேற்கில் கல்வராயன்மலை 35 கி.மீ.; வடக்கில் திருவண்ணாமலை 47 கி.மீ.;கள்ளக்குறிச்சி 18 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு11.60 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 41 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, சங்கராபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3] மக்கள்தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,539 வீடுகளும், 15,664 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 79.8%மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,004 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 935 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,304 மற்றும் 87 ஆகவுள்ளனர்.[4] ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia