யாசுமினம் நவுமீன்சு
யாசுமினம் நவுமீன்சு (தாவர வகைப்பாட்டியல்: Jasminum noumeense) என்பது மல்லிப் பேரினத்தைச் சார்ந்த, இருநூற்றிற்கும் மேற்பட்ட மல்லிகை இனங்களில் ஒன்றாகும். இப்பேரினம், பன்னாட்டு பூக்கும் தாவர மரபுநெறிமுறை குழுமத்தின் (APG IV) நான்காவது பதிப்பின் படி[2], முல்லைக் குடும்பத்திலுள்ள 29 பேரினங்களில்[3] ஒன்றாக இடம் பெற்றுள்ளது. 1908 ஆம் ஆண்டு இவ்வினத்தினைப் பற்றிய தாவரவியல் முதற்குறிப்பு வெளிவந்ததாக, கியூ தாவரவியல் ஆய்வகம் தெரிவிக்கிறது. பேரினச்சொல்லின் தோற்றம்அரபி மொழியில், யாச(அ)மின் (ياسمين), என்றும்; இந்த அரபிச்சொல்லுக்கு "இனிய நுறுமணமுள்ள தாவரங்கள்" என்பது பொருளாகும். [4] பாரசீக மொழியில் யாசுசுமின் (یاسمین) என்றும்; உருது மொழியில் یاسمینی அல்லது یاسمین بو என்றும் அழைப்பர். மேலும், மல்லிப்பூவின் வாசனை எண்ணெக்கான பெயர்கள், சில கிரேக்க சொற்களோடு (iasme, iasmelaion) ஒப்பீடும் செய்யப்படுகிறது. 1570 ஆம் ஆண்டுகளில், பிரஞ்சு மொழியில் jasmin என்ற சொல்லும், அதற்கு முன்னர் jessemin என்ற சொல்லும் பயன்பாட்டில் இருந்துள்ளன. பிரஞ்சு மொழியிலிருந்து, பல செருமானிய மொழிகளில் இச்சொல்லின் வேறுபட்ட வடிவங்கள் தோன்றியது எனலாம். பதினாறாம் நூற்றாண்டில் இத்தாவர வகை இங்கிலாந்தில் முதன்முதலாக வளர்க்கப்பட்டதாக அறிய முடிகிறது. [5] வாழிடம்நியூ கலிடோனியா தீவில் மட்டுமே காணப்படும் அரிய இனமாகவும், அத்தீவின் அகணியத் தாவரமாகவும், செம்பட்டியலிலும் உள்ள மல்லியினமாகும்.[6] இவற்றையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia