யுரேனியம் போரைடு
யுரேனியம் போரைடு (Uranium boride) என்பது UB2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] யுரேனியம் மற்றும் போரான் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் அதிகமான நிலைப்புத்தன்மையும், நீரில் கரையும் தன்மையற்றும் கண்ணாடியன்ன போரைடாகவும் காணப்படுகிறது. யுரேனியம் அடிப்படையிலான கதிரியக்கக் கழிவுகளைச் செயல்நீக்கம் செய்யவும் மற்றும் நீண்ட காலத்திற்கு அதைப் பாதுகாப்பாகச் சேமித்து ஆக்கமுறையில் பயன்படுத்தவும் சரியான ஒரு முறை ஆராயப்பட்டு வருகிறது. கதிரியக்கச் சிகிச்சையின் ஒரு வகையான அண்மை சிகிச்சையில் இச்சேர்மம் சில பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. சிகிச்சைத் தளத்தின் மீது நேரடியாக கதிரியக்க நுண்கோளத்தைப் பதித்தும், சிகிச்சைத் தளத்திற்கு பாதிப்பு ஏதுமின்றி மேலும் காலநீட்டிப்புச் செய்து அங்கேயே வைத்திருக்கவும் இவ்வகையானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia