யுரேனியம் மூவயோடைடு

யுரேனியம் மூவயோடைடு
இனங்காட்டிகள்
13775-18-3
பண்புகள்
UI3
வாய்ப்பாட்டு எடை 618.74232 கி/மோல்
தோற்றம் கருப்புநிற திண்மம்
அடர்த்தி 6.78 g/cm3[1]
உருகுநிலை 766 °C (1,411 °F; 1,039 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

யுரேனியம் மூவயோடைடு (Uranium triiodide) என்பது UI3 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய ஒரு கனிமவேதியல் சேர்மமாகும். யுரேனியம் மற்றும் அயோடின் தனிமங்கள் இச்சேர்மத்தின் பகுதிப்பொருட்களாக உள்ளன.

தயாரிப்பு

யுரேனியம் மற்றும் அயோடின் தனிமங்கள் நேரடியாக வினைபுரிவதன் மூலம் யுரேனியம் மூவயோடைடு உருவாகிறது:[2].

2 U + 3 I2 → 2 UI3

பண்புகள்

கருப்பு நிறத் திண்மமாகக் காணப்படும் யுரேனியம் மூவயோடைடு 766°செ[3] வெப்பநிலையில் உருகுகிறது. படிகமாகலின்போது இச்சேர்மம் சாய்சதுர படிக அமைப்பில் படிகமாகிறது. (புளூட்டோனியம் முப்புரோமைடு வகை) Ccmm வகை இனக்குழுவுடன் அணிக்கோவை அளபுருக்களின் மதிப்பு a = 432.8 பைமீ, b = 1401.1 பைமீ, and c = 1000.5 பைமீ ஆகவும் மற்றும் ஒர் அலகுகூட்டிற்கு நான்கு சூத்திர அலகுகள் என்ற முறையிலும் அமைந்துள்ளன[1] . பல்வேறு வகையான டையீல்-ஆல்டர் வினைகளுக்கு யுரேனியம் மூவயோடைடு பொருத்தமான இலூயிசு அமில வினையூக்கியாகக் கருதப்படுகிறது. இவ்வினைகள் சாதாரண வீரியம் குறைந்த நிலையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.[4]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 J. H. Levy, J. C. Taylor, P. W. Wilson: "The Structure of Uranium(III) Triiodide by Neutron Diffraction", in: Acta Cryst. B, 1975, 31, S. 880–882 (எஆசு:10.1107/S0567740875003986).
  2. Georg Brauer (ed.): Handbuch der Präparativen Anorganischen Chemie. 3rd edition. Vol. 2, Enke, Stuttgart 1978, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-87813-3, p. 1218.
  3. Arnold F. Holleman, Nils Wiberg: Lehrbuch der Anorganischen Chemie, 102. Auflage, de Gruyter, Berlin 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-017770-1, S. 1969.
  4. Jacqueline Collin, Leonor Maria, Isabel Santos: "Uranium Iodides as Catalysts for Diels–Alder Reactions", in: Journal of Molecular Catalysis A: Chemical, 2000, 160 (2), pp. 263–267 (எஆசு:10.1016/S1381-1169(00)00257-0)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya