யுரேனைல் ஆக்சலேட்டு (Uranyl oxalate) UO2C2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெளிர் மஞ்சள் நிறத்தில் தூள் நிலையில் இது காணப்படுகிறது. அணு எரிபொருள் சுழற்சியின் முன்னும் பின்னுமான தொழில்துறை அணுசக்தி செயல்முறைகளில் இது பெரும்பாலும் உருவாகிறது. நீருறிஞ்சும் தன்மை காரணமாக, யுரேனைல் ஆக்சலேட்டு நீரிழப்பு நிலையில் அரிதாகவே காணப்படுகிறது. பொதுவாக அறை வெப்பநிலையில் முந்நீரேற்று வடிவத்தில் (UO2C2O4·3H2O)(UO2C2O4·3H2O) யுரேனைல் ஆக்சலேட்டு காணப்படுகிறது.[1] அறை வெப்பநிலையில் இந்த தூளானது P21/c என்ற இடக்குழுவுடன் ஒற்றை சரிவு படிக அமைப்பை வெளிப்படுத்துகிறது.[2]
↑Thompson, Nathan B. A.; Stennett, Martin C.; Gilbert, Matthew R.; Hyatt, Neil C. (2021-01-06). "Nuclear forensic signatures and structural analysis of uranyl oxalate, its products of thermal decomposition and Fe impurity dopant". Journal of Radioanalytical and Nuclear Chemistry327 (2): 957–973. doi:10.1007/s10967-020-07538-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0236-5731.
↑Jayadevan, N. C.; Chackraburtty, D. M. (1972-11-15). "The crystal and molecular structure of uranyl oxalate trihydrate". Acta Crystallographica Section B: Structural Crystallography and Crystal Chemistry28 (11): 3178–3182. doi:10.1107/s0567740872007691. பன்னாட்டுத் தர தொடர் எண்:0567-7408.