யுரேனைல் பார்மேட்டு
யுரேனைல் பார்மேட்டு (Uranyl formate) (UO2(CHO2)2·H2O) ஒரு நுண்ணிய, மஞ்சள் நிற, எளிதாகக் கொட்டும் துாளாகும். இந்த கனிமச் சேர்மம், ஊடுருவி எதிர்மின்னி நுண்ணோக்கிகளில் எப்போதாவது பயன்படுத்தப்படுகிறது. யுரேனைல் அசிட்டேட்டை விடவும், நுண்ணிய நொய் அமைப்பைக் (fine grain structure) கொண்டுள்ளதால், இச்சேர்மம் 0.5% அல்லது 1% செறிவு கொண்ட எதிர்மறை சாயமேற்றி நீர்க்கரைசலாக ஊடுருவி எதிர்மின்னி நுண்ணோக்கிகளில் எப்போதாவது பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், யுரேனைல் பார்மேட்டு எளிதில் கரைசலில் செல்வதில்லை. ஆனால், கரைந்து விட்டாலும் கூட ஒரு சாயமேற்றியாக குறைவான காலமே தனது ஆயுளைக் கொண்டுள்ளது. இச்சேர்மமானது, ஒளியைப் பொறுத்த வரை, குறிப்பாக புற ஊதாக் கதிருக்கு மிகவும் தீவிரமான துலங்கலை வெளிப்படுத்தக்கூடியது. இதன் காரணமாக ஒளிக்கு காட்டி வைக்கப்பட்டால் வீழ்படிவாதல் நிகழ்கிறது. மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia