யுரேனைல் துத்தநாக அசிட்டேட்டு
யுரேனைல் துத்தநாக அசிட்டேட்டு (Uranyl zinc acetate) என்பது ZnUO2(CH3COO)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட யுரேனியத்தின் சேர்மமாகும். சோடியத்தின் அடர்த்தியை உறுதி செய்யும் சோதனைப் பொருளாக ஆய்வகங்களில் யுரேனைல் துத்தநாக அசிட்டேட்டு பயன்படுத்தப்படுகிறது. சோடியத்தை யுரேனைல் துத்தநாக அசிட்டேட்டுடன் வீழ்படிவாக்கும் அளவறி வீழ்படிவாக்கல் முறை மற்றும் சோடியத்தை யுரேனைல் துத்தநாக சோடியம் அசிட்டேட்டாக (UO2)3ZnNa(CH3CO2)9·6H2O. மாற்றி உறுதிப்படுத்தும் எடையறி பகுப்பாய்வு முறை ஆகியன இவ்விரண்டு முறைகளாகும். சீசியம் மற்றும் ருபீடியம் தனிமங்கள் இவ்வினையில் இருப்பது பிரச்சினையில்லை ஆனால் பொட்டாசியம் மற்றும் இலித்தியம் தனிமங்கள் இருந்தால் கண்டிப்பாக வினைச் செயல்முறைக்கு முன் அவை நீக்கப்பட வேண்டும்[1][2]. சிறுநீரில் உள்ள சோடியத்தின் அளவை கண்டறிவதற்கு இம்முறை மிகமுக்கியமான முறையாகும். இந்த அளவின் மூலமாகவே நோய் நிர்ணயம் செய்யப்படுகிறது. வெளிர் மஞ்சள் NaZn(UO2)3(C2H3O2)9 சேர்மமானது மிகச்சில கரையாத சோடியம் சேர்மங்களுள் ஒன்று என்பதால், சில சமயங்களில் யுரேனைல் துத்தநாக அசிட்டேட்டு சோடியம் சோதனைப்பொருள் என்றும் அழைக்கப்படுகிறது. ஆய்வகப் பயன்கள்இருமெத்தில் கார்பனேட்டை , தொலுவீன்-2,4-இருசமசயனேட்டாக மாற்றுவதற்கு வினையூக்கியாக யுரேனைல் துத்தநாக அசிட்டேட்டு பயன்படுகிறது..[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia