ராஜா மகேந்திர பிரதாப் சிங்
ராஜா மகேந்திர பிரதாப் சிங் (1 டிசம்பர் 1886 – 29 ஏப்ரல் 1979) என்பவர் இந்திய விடுதலை செயல்பாட்டாளர், பத்திரிக்கையாளர், இந்திய இடைக்கால அரசின் அதிபராக நாடு கடந்த அரசை நிறுவியவராவார். 1932 இல் அமைதிக்கான நோபல் பரிசிற்காகப் பரிந்துரைக்கப்பட்டார்.[1] 2021 செப்டம்பர் 14 இல் இவரது பெயரில் அலிகர் நகரில் புதிய பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.[2] இளமைக் காலம்1886 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் நாள் உத்தரப் பிரதேசத்தின் ஹத்தராஸ் மாவட்டத்தில் ஜாட் குடும்பத்தில் பிறந்தார். கன்சியாம் சிங்கின் மூன்றாவது மகனாகப் பிறந்தாலும் மூன்று வயதில் ராஜா ஹரிநாராயண் சிங் இவரைத் தத்தெடுத்தார்.[3] 1895 இல் அலிகர் அரசுப் பள்ளியிலும் மிண்டோ சர்கிளில் (அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முந்தைய பெயர்) கல்லூரிப் படிப்பையும் முடித்தார்.[3] பெல்வீர் கௌர் என்பவரை 1902 இல் மணந்தார். விடுதலைப் போராட்டம்சுதேசி இயக்கத்தில் கலந்து கொண்ட பல்வேறு தலைவர்களைச் சந்தித்ததன் மூலம் நாட்டுப் பற்று உணர்வு கொண்டார். தாதாபாய் நவ்ரோஜி, பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால் ஆகியோரின் கருத்துகள் தாக்கத்தை ஏற்படுத்தின, இதன் காரணமாக வெளிநாட்டு ஆடைகளை எரிக்கும் இயக்கத்தைத் தொடங்கினார்.[4] வீரேந்திரநாத் சட்டோபாத்யாய செயல்பாடுகள் குறித்து சியாம்ஜி கிருஷ்ண வர்மா மற்றும் ஹர் தயால் மூலம் அறிந்து கொண்டார். ஆப்கான் எல்லைவழியாக இராணுவ நடவடிக்கையினால் இந்தியாவினைக் கைப்பற்றத் திட்டமிட்டனர். பிரித்தானியப் பேரரசினை வீழ்த்த பல்வேறு ஐரோப்பிய ரஷ்ய அரசியல்வாதிகளுடன் நட்பு கொண்டிருந்தார். இவரது சொத்துக்களை முடக்கி, பிடித்துத் தருவோருக்குப் பரிசினை பிரித்தானிய அரசு அறிவித்தது. 1925 இல் ஜப்பான் இடம்பெயர்ந்தார். இந்திய இடைக்கால அரசுஇந்திய விடுதலைக்காக 1915 இல் இவரது பிறந்தநாளில் காபுல் நகரில் முதலாவது நாடு கடந்த அரசை உருவாக்கினார். இவர் அதிபராகவும், பர்கதுல்லா பிரதமராகவும், மௌலானா உள்துறை அமைச்சராகவும் பதவியேற்று பிரித்தானிய அரசின் மீது ஜிகாத் போரை அறிவித்தனர்.[5] ஆனால் போதிய பலமில்லாததால் வெற்றி பெறமுடியவில்லை. 32 ஆண்டுகள் கழித்து, சிட்டி ஆப் பேரீஸ் கப்பலில் 1946 ஆகஸ்ட் 9 ஆம் நாள் சென்னைவழியாக இந்தியா வந்தடைந்தார். 1957 மக்களவை தேர்தல்1957 இல் இரண்டாவது மக்களவைத் தேர்தலில் மதுரா மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக வெற்றி பெற்றார்.[6]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia