ராடான் மீடியாவொர்க்ஸ்

ராடான் மீடியாவொர்க்ஸ்
வகைமகிழ்கலை
நிறுவுகை1999
நிறுவனர்(கள்)ராதிகா
தலைமையகம்சென்னை, தமிழ்நாடு
சேவை வழங்கும் பகுதிஇந்தியா, சிங்கப்பூர்
முதன்மை நபர்கள்ராதிகா
(தலைவர் & நிர்வாக இயக்குநர்)
சரத்குமார் (இயக்குநர் - செயல்பாடுகள்)
அருணாசலம் கிருஷ்ணமூர்த்தி (இயக்குநர்)
ஜே. கிருஷ்ணபிரசாத் (இயக்குநர்)
வி. செல்வராஜ் (இயக்குநர்)
தொழில்துறைமகிழ்கலை
உற்பத்திகள்தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
அசையும் படங்கள்
இணையத்தளம்www.radaan.tv

ராடான் மீடியாவொர்க்ஸ் என்பது 1999ஆம் ஆண்டு முதல் நடிகை ராதிகா தலைமையில் இயங்கும் ஒரு மகிழ்கலை தயாரிப்பு நிறுவனம் ஆகும். இதன் தலைமையிடம் சென்னை தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இதன் செயல்பாட்டு இயக்குநராக நடிகரும் ராதிகாவின் கணவருமான சரத்குமார் உள்ளார்.

இந்த நிறுவனம் 1994ஆம் ஆண்டு தனி ஒரு நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டு 1999ஆம் ஆண்டு ஒரு பொழுதுபோக்கு தயாரிப்பு நிறுவனமாக செயல்படுத்தப்பட்டது. இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் முதலில் தயாரிக்கப்பட்ட தொடர் பாலைவனப்புயல் இந்த தொடர் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த தொடரில் ராதிகா கதாநாயகியாக நடித்துள்ளார். அதை தொடர்ந்து சித்தி, அண்ணாமலை, செல்வி போன்ற பல தமிழ் தொடர்கள் மற்றும் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பல தொடர்களை தயாரித்து ஒளிபரப்பு செய்து வருகின்றது.

தொடர்கள்

ஆண்டு தலைப்பு அலைவரிசை இணை தயாரிப்பு
தந்திரபூமி
1999 பாலைவனப்புயல் ஜெயா தொலைக்காட்சி
நாலாவது முடிச்சு
மல்லிகை முல்லை
1997 - 1998 மறுபிறவி விஜய் தொலைக்காட்சி
பம்பர் குலுக்கல்
1999 - 2001 சித்தி சன் தொலைக்காட்சி
2001 - 2002 காவேரி சன் தொலைக்காட்சி
2000 கிராண்ட் மதர் 2000
2002 - 2004 உதயம் சன் தொலைக்காட்சி
2002 - 2005 ருத்ரவீணை
2004 - 2005 சிவமயம்
2004 - 2005 சின்ன பாப்பா பெரிய பாப்பா
2005 - 2006 செல்வி
2007 - 2009 அரசி
2007 - 2008 சூர்யவம்சம்
2008 திருவிளையாடல்
2008 - 2010 செந்தூரப்பூவே
2009 - 2013 செல்லமே
2010 - 2014 இளவரசி
2013 - 2018 வாணி ராணி
2013 புரியாமல் பிரிந்தோம் வசந்தம் தொலைக்காட்சி மீடியாகார்ப்
2012 - 2015 சிவசங்கரி சன் தொலைக்காட்சி
2014 - 2018 தாமரை
2014 - 2018 சின்ன பாப்பா பெரிய பாப்பா 4
2015 - 2016 யாழினி ஐபிசி தமிழ்
2018 - 2020 மின்னலே சன் தொலைக்காட்சி
2018 - 2019 சந்திரகுமாரி சன் என்டர்டெயின்மெண்ட்
2020 - ஒளிபரப்பில் சித்தி (பருவம் 2) சன் என்டர்டெயின்மெண்ட்

வெளி இணைப்புகள்

  • www.radaan.tv அதிகாரப்பூர்வ வலைத்தளம்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya