இட்ரியம்(III) குளோரைடு
இட்ரியம்(III) குளோரைடு (Yttrium(III) chloride) என்பது YCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இட்ரியம் மற்றும் குளோரின் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் நீரிலி (YCl3) மற்றும் நீரேற்று (YCl3(H2O)6) ஆகிய இரண்டு வடிவங்களில் காணப்படுகிறது. இரண்டுமே நிறமற்ற திண்மங்களாக தண்ணீரில் நன்றாக கரைந்து நீர்மயமாகின்றன. அமைப்புதிண்மநிலை YCl3 , குளோரைடு அயனிகளின் கனசதுர நெருக்கப் பொதிவு கட்டமைப்பை ஏற்றுள்ளது. இட்ரியம் அயனிகள் எண்முகத் துளைகளின் மூன்றில் ஒரு பங்கு பொதிவை நிரப்புகின்றன. விளைகின்ற YCl6 அடுத்தடுத்த எண்முகத்தின் முனைகளை பகிர்ந்து கொண்டு அடுக்குக் கட்டமைப்பைத் தருகிறது[2] This structure is shared by a range of compounds notably AlCl3. தயாரிப்பு மற்றும் வினைகள்பெரும்பாலும் அமோனியம் குளோரைடு வழியாகத்தான் YCl3 தயாரிக்கப்படுகிறது. இவ்வினையின் தொடக்கம் Y2O3 அல்லது நீரேற்ற குளோரைடு அல்லது ஆக்சிகுளோரைடு [3][4] அல்லது YCl3•6H2O. இவற்றில் ஒன்றிடமிருந்துதான் தொடங்குகிறது. இம்முறைகளில் (NH4)2[YCl5]:சேர்மம் தயாரிக்கப்படுகிறது.
Y2O3 உடன் நீர்க்கரைசலான HCl சேர்த்து வினைப்படுத்தினால் நீரேற்ற குளோரைடை YCl3· 6H2O உற்பத்தி செய்கிறது.[5] இவ்வுப்பைச் சூடுபடுத்தினால் இது நீரிலியைக் கொடுப்பதில்லை, மாறாக ஓர் ஆக்சி குளோரைடைக் கொடுக்கிறது.(NH4)2[YCl5]: மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia