லோக்தாந்திரிக் சமாஜ்வாதி கட்சி, நேபாளம்
லோக்தாந்திரிக் சமாஜ்வாதி கட்சி, நேபாளம் (Loktantrik Samajwadi Party, Nepal) (நேபாளி: लोकतान्त्रिक समाजवादी पार्टी), நேபாளத்தின் ஆறாவது பெரிய அரசியல் கட்சியாகும். இது ஜனதா சமாஜ்வாதி கட்சியிலிருந்து 18 ஆகஸ்டு 2021 அன்று மகந்தா தாக்கூர் தலைமையில் பிரிந்து நிறுவப்பட்ட கட்சி ஆகும்.[4][5][6]இதன் சின்னம் சைக்கிள் ஆகும். 2022 நேபாள பொதுத் தேர்தலில் இக்கட்சி ஜனநாயக இடதுசாரி கூட்டணியில், நேபாளி காங்கிரஸ் மற்றும் மாவோயிஸ்ட், நேபாள பொதுவுடமை கட்சி (ஐக்கிய சோசலிஸ்ட்) மற்றும் நேபாள மக்கள் சோசலிஸ்டு கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டது. 2022ல் இக்கட்சி நேபாள பிரதிநிதிகள் சபையில் 4 உறுப்பினர்களும், நேபாள தேசிய சபையில் 1 உறுப்பினரும், மாநில சட்டமன்றங்களில் 9 உறுப்பினர்களும், உள்ளாட்சி மன்ற தலைவர்களில் 16 பேரும், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களில் 581 பேரும் பிரதிநிதித்துவம் வகிக்கின்றனர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia