நேபாள லோக்தந்திரிக் சமாஜ்வாதி கட்சி
நேபாள லோக்தந்திரிக் சமாஜ்வாதி கட்சி (Loktantrik Samajwadi Party, Nepal) (நேபாளி: लोकतान्त्रिक समाजवादी पार्टी), நேபாள நாட்டின் நான்காவது பெரிய மாநிலக் கட்சியாகும்.[4] இக்கட்சி நேபாளத்தில் மாதேசி மக்கள் வாழும் மாநிலங்களில் குறிப்பாக மாதேஷ் மாநிலத்தில் பலமாக உள்ளது. இது மாதேசி மக்களின் உரிமைகளுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுகிறது. இக்கட்சி 18 ஆகஸ்டு 2021 நேபாளத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது.[5][6]மகந்தா தாக்கூர் இப்புதிய கட்சியின் நிறுவனத் தலைவர் ஆவார்.[7]கே. பி. சர்மா ஒளி அமைச்சரவையில் நேபாள மக்கள் சோசலிஸ்டு கட்சி சேர்ந்ததை அடுத்து ஏற்பட்ட பிளவால் இப்புதிய கட்சி நிறுவப்பட்டது. 2022 நேபாள பொதுத் தேர்தலில்2022 நேபாள பொதுத் தேர்தலில் இக்கட்சி சார்பாக நேபாள பிரதிநிதிகள் சபைக்கு 4 உறுப்பினரகளும்; நேபாள தேசிய சபைக்கு 1 உறுப்பினரும்; மாதேஷ் மாநில சட்டமன்றத்திற்கு 9 உறுப்பினர்களும்; நகராட்சி தலைவர்களாக 16 பேரும்; நகராட்சி மன்ற உறுப்பினர்களாக 581 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனையும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia