ழோன் திரோல்
ழோன் மார்செல் திரோல் (Jean Marcel Tirole, ஆகத்து 9, 1953) பிரெஞ்சு பொருளியல் பேராசியர் ஆவார். தொழிலகக் கட்டமைப்பு, ஆட்டக் கோட்பாடு, வங்கியியல் மற்றும் நிதி, மற்றும் உளவியல்சார் பொருளியல் துறைகளில் பணியாற்றுகிறார். துலூசு பொருளியல் பள்ளியில் உள்ள ழோன்-ழாக் லபோன் பவுண்டேசனின் தலைவராகவும் துலூசில் உள்ள தொழிலக பொருளியல் கழகத்தில் (IDEI) அறிவியல் இயக்குநராகவும் துலூசு மேம்பட்ட ஆய்வுக் கழகத்தின் (IAST) நிறுவன உறுப்பினராகவும் பொறுப்பேற்றுள்ளார். மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பின்னர் 1984 வரை இகோல் நேசனல் டெசு பொன்ட்சு எ சூசியில் ஆய்வாளராக பணியாற்றினார். 1984–1991 காலகட்டத்தில் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றினார். 1998இல் பொருளியலளவை சமூகத்தின் தலைவராக விளங்கினார். 2001இல் ஐரோப்பிய பொருளியல் சங்கத்தின் தலைவராக பொறுப்பில் இருந்தார். இன்னமும் அவர் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக பணிபுரிகிறார். " சந்தைச் செல்வாக்கு மற்றும் கட்டுப்பாடு குறித்த இவரது பகுப்பாய்விற்காக" 2014ஆம் ஆண்டிற்கான பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு திரோலுக்கு வழங்கப்பட்டுள்ளது.[1] மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia