1150 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஐதரசன் புளோரைடு வாயுச் சூழலில் ஐதரசனை உபயோகித்து வனேடியம் முப்புளோரைடை குறைத்தல் வினைக்கு உட்படுத்துவதன் மூலம் வனேடியம்(II) புளோரைடை உற்பத்தி செய்யலாம்:[3]
2 VF3 + H2 -> 2 VF2 + 2 HF
பண்புகள்
இயற்பியல் பண்புகள்
வனேடியம்(II) புளோரைடு நாற்கோணகப் படிக அமைப்பில் P42/mnm (எண். 136) என்ற இடக்குழுவுடன் a = 480.4 பைக்கோமீட்டர் மற்றும் c = 323.7 பைக்கோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுரு மாறிலிகளுடன் படிகமாகிறது.[4]
வேதிப் பண்புகள்
வனேடியம்(II) புளோரைடு ஒரு வலுவான குறைக்கும் முகவராகும். இது மெக்னீசியம் ஐதராக்சைடு முன்னிலையில் நைட்ரசனை ஐதரசீனாகக் குறைக்கிறது.[2]
↑ 2.02.12.2Holleman, A. F.; Wiberg, E. (2001), Inorganic Chemistry, San Diego: Academic Press, p. 1550, ISBN0-12-352651-5
↑Lothar Kolditz: Anorganische Chemie Teil 2. VEB Deutscher Verlag der Wissenschaften, Berlin, 1980, S. 641.
↑J. W. Stout, W. O. J. Boo: Crystalline vanadium (II) fluoride, VF2. Preparation, structure, heat capacity from 5 to 300 K and magnetic ordering. In: The Journal of Chemical Physics. 71, 1, 1979, S. 1–8, எஆசு:10.1063/1.438115.