வாசிம்

வாசிம்
நகரம்
Map
இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தில் வாசிம் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 20°06′N 77°09′E / 20.1°N 77.15°E / 20.1; 77.15
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்வாசிம் மாவட்டம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்வாசிம் நகராட்சி மன்றம்
பரப்பளவு
 • மொத்தம்47 km2 (18 sq mi)
 • பரப்பளவு தரவரிசை42வது
ஏற்றம்
546 m (1,791 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்78,387
 • அடர்த்தி1,700/km2 (4,300/sq mi)
மொழி
 • அலுவல் மொழிமராத்திய மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
444505
வாகனப் பதிவுMH-37
இணையதளம்https://washim.gov.in/en/

வாசிம் (Washim), இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் விதர்பா பிரதேசத்தில் உள்ள வாசிம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரம் மாநிலத் தலைநகரான மும்பைக்கு வடகிழக்கே 538.கிலோ மீட்டர் தொலைவிலும்; நாக்பூருக்கு தென்மேற்கே 271.6 கிலோ மீட்டர் தொலைவிலும் சம்பாஜி நகருக்கு வடகிழக்கே 222.6 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 27 வார்டுகளும், 15,393 குடியிருப்புகளும் கொண்ட வாசிம் நகரத்தின் மக்கள் தொகை 78,387 ஆகும். அதில் 40,262 ஆண்கள் மற்றும் 38,125 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12.50 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 947 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 89.09 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 18.93 % மற்றும் 1.44 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 63.93%, இசுலாமியர் 21.24%, சமணர்கள் 1.97%, பௌத்தர்கள் 11.70%, கிறித்தவர்கள் 0.81%, சீக்கியர்கள் 0.26% மற்றும் பிற சமயத்தினர் 0.09% வீதம் உள்ளனர்.[2]

போக்குவரத்து

தொடருந்து நிலையம்

நான்டேட் இரயில்வே கோட்டத்தில் அமைந்த வாசிம் தொடருந்து நிலையம்[3] மூன்று நடைமேடைகள் கொண்டது. இந்நிலையத்திலிருந்து இருப்புப்பாதை வழியாக மும்பை, புனே, தானே,நாக்பூர், நாந்தேட், நாசிக், ஐதராபாத், திருப்பதி, போபால், ஆக்ரா,மதுரா, சத்திரபதி சம்பாஜிநகர், இந்தூர், அமிர்தசரஸ், ஜெய்ப்பூர், பெங்களூர் போன்ற நகரங்களுடன் இணைக்கப்படுகிறது

தட்ப வெப்பம்

தட்பவெப்ப நிலைத் தகவல், வாசிம் (1991-2020)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 36.2
(97.2)
37.6
(99.7)
41.2
(106.2)
45.0
(113)
45.4
(113.7)
44.8
(112.6)
38.2
(100.8)
33.2
(91.8)
35.7
(96.3)
36.4
(97.5)
35.0
(95)
33.8
(92.8)
45.4
(113.7)
உயர் சராசரி °C (°F) 30.2
(86.4)
32.6
(90.7)
36.9
(98.4)
39.9
(103.8)
42.1
(107.8)
36.3
(97.3)
30.1
(86.2)
29.1
(84.4)
30.8
(87.4)
32.7
(90.9)
31.7
(89.1)
30.3
(86.5)
33.4
(92.1)
தாழ் சராசரி °C (°F) 14.0
(57.2)
17.0
(62.6)
20.6
(69.1)
24.3
(75.7)
27.5
(81.5)
24.0
(75.2)
22.4
(72.3)
21.8
(71.2)
21.9
(71.4)
19.9
(67.8)
17.2
(63)
14.4
(57.9)
20.3
(68.5)
பதியப்பட்ட தாழ் °C (°F) 8.6
(47.5)
8.0
(46.4)
11.0
(51.8)
17.5
(63.5)
21.0
(69.8)
19.8
(67.6)
18.6
(65.5)
17.1
(62.8)
17.6
(63.7)
12.8
(55)
11.0
(51.8)
8.8
(47.8)
8
(46.4)
ஆதாரம்: India Meteorological Department[4]

மேற்கோள்கள்

  1. "Census of India: Search Details". Archived from the original on 24 September 2015.
  2. "Washim Municipal Council City Population Census 2011-2025 | Maharashtra". www.census2011.co.in. Retrieved 2025-04-25.
  3. "Washim railway station", Wikipedia (in ஆங்கிலம்), 2025-04-11, retrieved 2025-04-25
  4. "Climatological Tables of Observatories in India 1991-2020" (PDF). India Meteorological Department. Retrieved April 8, 2024.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya