தானே
தானே (IPA: [ˈʈaɳe]) (மராத்தி : ठाणे), இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில், மும்பைப் பெருநகரின் வடகிழக்கே உள்ள புறநகர்ப் பதியில் உள்ள ஒரு நகரம். இது மும்பை பெருநகரப் பகுதியாகும். இது தானே ஓடையின் முகப்புப் பகுதியில் உள்ளது. தானேயின் சிறப்புகளில் ஒன்று, இந்திய நிலப்பரப்பில் முதன்முறையாக ஓடிய தொடர்வண்டி, ஏப்பிரல் 16, 1853 இல் போரி பந்தரில் (இப்பொழுது சத்திரபதி சிவாசி முனையில்) இருந்து புறப்பட்டு 34 கி.மீ தொலைவில் உள்ள தானேயிக்கு (அப்பொழுது தானாவுக்கு) ஓடியது இதுவே ஆசியாவில் தொடர்வண்டி காலத்தைத் தொடக்கியது என்பர். தானே நகரம் 147 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது; இதன் மக்கள் தொகை, 2011-இன் கணக்கெடுப்பின்படி, 2.4 மில்லியனுக்கும் கூடுதலாகும்.[1] மகாராட்டிரா மாநில நெடுஞ்சாலை 42 தானே மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளையும், கிழக்கு விரைவு நெடுஞ்சாலையையும் இணைக்கிறது. இன்று தானே அனைத்து துறைகளிலும் முதன்மை வகிக்கிறது. திவா - மும்ரா - கல்வா பகுதிகள் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளாகும்.. இப்பகுதி மக்கள் தங்கள் பயணத்தை புறநகர் ரயில் சாந்தே உள்ளனர். தானேயின் பகுதிகள்
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
வெளியிணைப்புகள்
}}
|
Portal di Ensiklopedia Dunia