வாளுக்கு வேலி அம்பலம்வாளுக்குவேலி அம்பலம், தென் தமிழகத்தில் கி.பி.18-ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்களின் ஆட்சியதிகாரத்தை எதிர்த்துப் போரிட்ட பாகனேரி என்ற கள்ளர் நாட்டின் தலைவராவார். வாழ்க்கைக் குறிப்புபாகனேரி, தமிழ்நாடு மாநிலத்தின் சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட, சிவகங்கை வட்டம், காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. பாகனேரி நாடு என்பது 22 1/2 சிற்றூர்கள் உட்பட்டுள்ள ஒரு பகுதியாகும். இந்நாட்டின் தலைவர் வாளுக்குவேலி அம்பலம் ஆவார். இவருடைய தங்கை கல்யாணி நாச்சியார் இவருடைய தம்பி கறுத்த ஆதப்பன் அம்பலம் ஆவார்கள். மருது பாண்டியர்களின் உற்ற நண்பராக விளங்கிய வாளுக்கு வேலி அம்பலத்தின் போர்ப்படைகள் வெள்ளையர்களுக்கெதிரான போரில் மருதுபாண்டியர்களுக்கு பெரிதும் உதவின.[1] வேலு நாச்சியார் மற்றும் மருதுசகோதரர்களுடன் சேர்ந்து, இவர் போரில் ஈடுபட்டதை, சிவகங்கை சரித்திர அம்மானையில் பக்கம் 151 இல் குறிப்பிடப்படுகிறது. வேலு நாச்சியார் திருப்பத்தூர் படைக்கு நன்னியம்பலம் மற்றும் சேதுபதி அம்பலம் என்ற கள்ளர் தலைவர்களை தலைமை ஏற்கச் செய்தும் , காளையார் கோயில் படைப்பிரிவிற்கு மருது சகோதரர்களைத் தலைமை ஏற்கச் செய்தார்.[2][3][4] அக்டோபர் 24 ,1801 இல் கத்தப்பட்டு என்ற ஊரில் சூழ்ச்சியால் கொல்லப்பட்டார். அந்த இடத்தில் இவரின் நினைவாக, இவரது சகோதரர் கருத்தப்பன் அம்பலத்தால் நடுகல் வைத்து வணங்கி வருகின்றனர். அதில் வாளுக்குவேலி அம்பலம் சிலையின் கையில் ஈட்டி மற்றும் வளரி வைத்துள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது. நினைவுஇவருடைய நினைவாகவும் மற்றும் வீரத்தை போற்றும் விதமாகவும் சூன் 10 ஆம் (வைகாசி 27) தேதி, பாகனேரி நாட்டு மக்களால் பொங்கல் படையலிட்டு, வீர வணக்க நாளாக கொண்டாடி வருகின்றனர்.[5][6] இவருடைய வீரத்தினை போற்றும் விதமாக அரசு விழா நடத்த வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.[7] தமிழக அரசு எங்களுடைய கோரிக்கைகளை ஏற்று 22 1 2025 அன்று ஸ்ரீமது முத்து விஜய ரகுநாத பாஸ்கர சேதுபதி வாளுக்கு வேலி அம்பலத்தின் வெண்கல திரு உருவ சிலையை அவரது பிறந்த பூமியான நகரம் பட்டியில் தமிழக முதலமைச்சர் அவர்களின் பொர்க்கரங்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது[8] நகரம்பட்டியில் இவரது வாரிசுதாரர் வம்சாவளியினர் இன்றளவும் கா செல்வராஜ் சி த கண்ணதாசன் சித துரை சித வாளுக்கு வேலி சுப ராஜராஜ சோழன் மற்றும் பலர் அவரது சொந்த ஊரான நகரம் பட்டியில் இன்றளவும் வசித்து வருகின்றனர்.[சான்று தேவை] நூல்கள்"வாளுக்கு வேலி" அம்பலத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, எஸ். எஸ். தென்னரசு, செம்மாதுளை (1975) என்ற நூலை இயற்றினார். [9] அதே போல் இவரின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு "கலைஞர்" மு. கருணாநிதி எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம் தென்பாண்டிச் சிங்கம் (1983) ஆகும். புதினக்கதை தென்பாண்டி சிங்கம் என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடராகவும் பொதிகை தொலைக்காட்சியில் வெளியானது. இதில் நடிகர் நாசர் முதன்மை வேடத்தில் நடித்தார். இத்தொடருக்கு இளையராஜா இசையமைத்தார்.[10] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia