காந்தி-இர்வின் ஒப்பந்தம்

காந்தி-இர்வின் ஒப்பந்தம் (Gandhi–Irwin Pact) என்பது மார்ச் 5, 1931ல் மகாத்மா காந்திக்கும் இந்திய வைசுராய் இர்வின் பிரபுவுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு ஒப்பந்ததைக் குறிக்கிறது. இது டெல்லி ஒப்பந்தம் / தில்லி ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. 1930 சட்டமறுப்பு இயக்கத்துக்குப் பின்னர் காலனிய ஆட்சியாளர்கள் மற்றும் விடுதலை இயக்கத்தினர் இடையே நடைபெற்ற முதல் அதிகாரப் பூர்வ சமரசப்பேச்சு வார்த்தை இது. இரு தரப்பினரும் தங்கள் முந்தைய நிலைகளைத் தளர்த்தி பல மாற்றங்களுக்கு ஒப்புக் கொண்டனர்.

இந்திய தேசிய காங்கிரசு ஒப்புக் கொண்டவை:

காலனிய அரசு ஒப்புக் கொண்டவை:

  • சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கு கொண்டு கைதான அரசியல் கைதிகளை விடுவித்தல்
  • இந்திய தேசிய காங்கிரசின் செய்ல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் அவசர காலச் சட்டங்களையும் விலக்கிக் கொள்ளுதல்
  • உப்பு மீதான வரியை இரத்து செய்து, இந்தியர்களுக்கு உப்பு உற்பத்தி செய்ய அனுமதி அளித்தல்
  • கள்ளுக்கடைகள் மற்றும் வெளிநாட்டுத் துணிக் கடைகளை மறியல் செய்ய காங்கிரசாரை அனுமதித்தல்
  • பறிமுதல் செய்யப்பட்ட சத்தியாகிரகிகளின் சொத்துக்களை திருப்பி ஒப்படைத்தல்

மூன்று வாரகால பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஏற்பட்ட இவ்வொப்பந்தத்தின் விளைவாக காங்கிரசு இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டது.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya