விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுவதும், பல்வேறு நாடுகளில் வாழும் அனைத்து விக்கிப் பயனர்களும் உழைப்பதன் மூலம் விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் நிகழ்வாகும்.
தமிழ் விக்கி மாரத்தான், தமிழ் விக்கிப்பீடியர்களால் நடத்தப்படுகிறது. அனைத்துப் பயனர்களை ஒருங்கிணைக்கவும், ஒற்றுமையை உறுதிப்படுத்தவும், புதிய பயனர்களை ஊக்குவிப்பதாகவும் அமையும். தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு நடைபெறும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் பயனர்கள், அந்த நேர அளவு முழுவதும் பங்களிக்க வேண்டும் என்பது இல்லை; அவரவருக்கு உகந்த நேரத்தில் விருப்பமான அளவிற்கு பங்களிக்கலாம்.
2022 ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கி மாரத்தான் பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
நோக்கம்
தற்போதைய பயனர்கள் உற்சாகத்தோடு பங்களிக்கவும், புதிய பயனர்களை இணைக்கவும் இது நல்லதொரு முன்னெடுப்பாகவும் வாய்ப்பாகவும் இருக்கும்.
நாள், கால அளவு
நாள்: 25 செப்டம்பர் 2022 (ஞாயிறு)
கால அளவு: 24 மணி நேரம் [ஞாயிறு அன்று காலை 6 மணி (இந்திய, இலங்கை நேரம்) முதல் அடுத்த நாள் காலை 6 மணி (இந்திய, இலங்கை நேரம்) வரை]
திட்டம் / கவனக்குவியம்
விக்கியில் பங்களிப்பது தன்னார்வப் பணி என்பது போன்றே மாரத்தான் நிகழ்வில் கலந்துகொள்ளுதலும்.
பயனர்கள் தமக்கு விருப்பமான தொகுப்புகளை இந்த நிகழ்வின்போது செய்யலாம்.
இவ்வாண்டு மாரத்தானில், துப்புரவு உள்ளிட்ட மேம்படுத்துதல் பணிகளை முதன்மையாகக் கருதி தொகுக்குமாறு பயனர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பரிந்துரைக்கப்படும் வழமையான தொகுப்புகள்
எண்
செயல்
உதவி
1
கட்டுரைகளில் எழுத்துப் பிழை, சந்திப்பிழை, இலக்கணப் பிழை உள்ளிட்ட திருத்தங்களைச் செய்தல்