விக்ரம் சிங் சைனி
விக்ரம் சிங் சைனி (Vikram Singh Saini)[2] இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1969 ஆம் ஆண்டு சூன் மாதம் 5 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்த இவர் 17 ஆவது உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக கத்தோலி சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்.[3][4] வாழ்க்கைக் குறிப்பு1969 ஆம் ஆண்டு சூன் மாதம் 5 ஆம் தேதியன்று சைனி உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர் மாவட்டத்தில் உள்ள கவால் கிராமத்தில் பிறந்தார்.[5] இராச்பாலா சிக்சயா நிகேதன் பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை படித்தார்.[6] 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டபோது தனது தொழிலை விவசாயம் என்று பட்டியலிட்டார்.[6] தொழில்விக்ரம் சைனி முன்பு கவாலின் கிராமப் பஞ்சாயத்தின் தலைவராக இருந்தார்.[7][8] உத்தரபிரதேசத்தின் 17 ஆவது சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 2017 ஆம் ஆண்டு முதல் இவர் கட்டௌலி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளார்.[1][9] சமாச்வாதி கட்சி வேட்பாளர் சந்தன் சிங் சவுகானை 31,374 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[10] முசாபர்பூர் கலவரம்2013 ஆம் ஆண்டு நடைபெற்ற முசாபர்பூர் நகர் கலவரம் தொடர்பான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இவர் மீதான கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் தொடர்பாக சைனி 2020 ஆம் ஆண்டு நீதிமன்றத்தின் முன் சென்றார். இக்கலவரத்தில் மூன்று பேர் இறந்தனர்.[7][11] கலவரத்தில் இவர் பங்கு வகித்ததாகக் கூறி 2014 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார்.[8] பதவிகள்
சர்ச்சைகள்மார்ச் 2017 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் பசுக்களை அவமரியாதை செய்தாலோ அல்லது கொலை செய்தாலோ அவரது கைகால்களை உடைப்பதாக விக்ரம் சைனி மிரட்டினார்.[12][13] 23 அக்டோபர் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதியன்று முசாபர்பூர் நகரில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பெண்களை துன்புறுத்தும் நபர்களை உடல் ரீதியாக தாக்குமாறு கேட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது[14] 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதியன்று மக்கள்தொகைக் கட்டுப்பாடு குறித்த கூட்டத்தில் உரையாற்றும் போது, இச் சட்டம் இயற்றப்படும் வரை இந்துக்கள் முடிந்தவரை அதிகமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று பேசினார். இரண்டு குழந்தைகள் இல்லாமல் இருப்பவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் மற்றவர்கள் கூடாது என்றும் இவர் கூறினார். மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் இயற்றப்படும் வரை தனது மனைவியிடமும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும்படி கூறியதாகவும் கூறினார்.[15] மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசு அரசாங்கம் வந்தே மாதரம் பாடுவது அரசு ஊழியர்களுக்கு கட்டாயமில்லை என்று 4 ஜனவரி 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 4 ஆம் தேதியன்று கூறியது. வந்தே மாதரத்திற்கு எதிரானவர்களுக்கு எதிராக ஒரு சட்டம் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் தேச விரோதிகளாகக் கருதப்பட வேண்டும் என்றும் சைனி அப்போது கூறினார். அதே உரையில், இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் எவரும் 'தேச விரோதிகளாக' கருதப்பட வேண்டும் என்றும், அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், அவர்களின் முதுகில் வெடிகுண்டுகளைக் கட்டி வெடிக்கச் செய்வேன் என்றும் கூறினார். பின்னர் இவர் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் உள்ளூர் மொழியைப் பயன்படுத்துவதாகவும் கூறினார். ஆனால் காங்கிரசு தலைவர்கள் இவர் ஒரு 'பயங்கரவாதி போல் பேசுவதாகக் கூறினார்.[16] செப்டம்பர் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சைனி நேரு குடும்பத்தை நீண்ட காலம் வாழ்க என்ற பொருளில் "ஐயாசு" என்று அழைத்தார்.[17][18] காசுமீரின் சிறப்பு தகுதியை உறுதி செய்யும் சட்டப்பிரிவு 370 ஐ அரசாங்கம் ரத்து செய்த பிறகு, 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 7 அன்று, காசுமீர் பெண்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்றும், முசுலீம் தொழிலாளர்கள் காசுமீரில் இருக்கும் பெண்களை திருமணம் செய்து கொள்வதால் மகிழ்ச்சியடைய வேண்டும் என்றும் சைனி கூறினார். இவரது கருத்துக்கள் பெண் வெறுப்பு என்று பரவலாக ஏளனப்படுத்தப்பட்டது. ஆனால் சைனி தான் ஆட்சேபனைக்குரியதாக எதுவும் கூறவில்லை எனக் கூறி அவரது கருத்துகளில் உறுதியாக இருந்தார்.[19][20] தகுதி நீக்கம்இவர் குற்ற வழக்கில் இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றதால் 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்[21] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia