1917 (ஆங்கில திரைப்படம்)
1917 என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான பிரித்தானிய நாட்டு காவிய போர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை துணை எழுத்தாளராக, துணை தயாரிப்பாளராக மற்றும் இயக்குநராக சாம் மெண்டெசு என்பவர் பணியாற்றியுள்ளார். இளம் வீரர்களாக ஜார்ஜ் மெக்கே மற்றும் டீன் சார்லஸ் சாப்மேன் ஆகியோர் நடித்துள்ளார்கள். இது ஒரு உண்மை கதை, முதலாம் உலகப் போரில் பிரித்தானிய படைப்பிரிவுகளிடையே செய்திகளைக் கொண்டு செல்லும் தூதுவராகச் செயல்பட்ட தனது தாத்தா ஆல்ஃப்ரெட் மென்டஸ் சிறுவயதில் தன்னிடம் கூறிய ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சாம் மென்டிஸ். மற்றும் இந்த திரைப்படம் ஒரே படப்பிடிப்பில் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கு சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia