தி இங்கிலிஷ் பேசண்ட் (திரைப்படம்)
த இங்க்லிஷ் பேஷன்ட் (The English Patient) 1996இல் வெளிவந்த ஆங்கிலத் திரைப்படம் ஆகும். இது இலங்கையரான மைக்கல் ஒண்டாத்தி என்பவரால் 1992 இல் எழுதப்பட்ட புதினத்தின் திரைப்பட வெளியீடாகும். மேலும் இத்திரைப்படம் காட்சியமைப்புகள் எடுக்கப்பட்டபோது ஒண்டாத்தி திரைப்படக் காட்சிகளை தனது விருப்பத்திற்கிணைய எடுக்க உதவினார் என்பதும், இத்திரைப்படம் 9 ஆஸ்கார் விருதுகளை வென்றதும் குறிப்பிடத்தக்கது. வகைகதைகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன. உடல் முழுவதும் தீக்காயங்களுடன் கனேடிய செஞ்சிலுவைச் சங்கப் பெண்மணியினால் பாதுகாக்கப்படுகின்றார் கவுண்ட் டி அல்மசி (ரால்ப் பியெனேஸ்). பின்னர் அவர் தனது வாழ்க்கை வரலாற்றை நினைத்துக் கொள்வது திரைக்கதை அவர் அவ்வாறு நினைக்கும் பொழுது அவருக்கு எவ்வாறு இக்காயங்கள் நேர்ந்ததெனவும் கூறுகின்றார். மேலும் வேறொருவரின் மனைவியாகப் போகும் ஒருவரிடம் ஏற்படும் காதல் காரணமாக அவரை தன்னுடன் அழைத்துச் செல்லும் பொழுது ஏற்படுகின்ற பல பிரச்சினைகளை எவ்வாறு எதிர் கொண்டார் எனவும் தனது காயப்பட்ட காதலியினைக் இறுதியில் காப்பாற்ற முடியாத நிலையில் தத்தளிக்கின்றார். குகை ஒன்றினுள் அவரது காதலியினை வைத்து விட்டு உதவி தேடி பாலைவனங்களில் நடைபோட்டு அருகில் இருந்த பிரித்தானியப் படைத் தலைமைப் பீடத்திற்குச் செல்கின்றார். அங்கு உதவி கொடுக்க மறுக்கும் அவர்களால் கைவிடப்பட்ட நிலையில் ஜேர்மனிய நாசிப்படைகளால் உதவி வழங்கப்படுகின்றார். இதற்கிடையில் இறந்து போகும் அவரது காதலியின் உயிரை அவரால் காப்பாற்ற இயலவில்லை. இறுதியில் ஜேர்மனியர்களுக்கு பிரித்தானிய அரசுப் படைகளின் ரகசியங்களை விளக்குகின்றார். இதனை அறிந்து கொள்ளும் இவர் அவர்கள் வழங்கிய விமான ஊர்தியில் இற்ந்த காதலியின் உடலைக் கொண்டு வருகையில் பிரித்தானியப் படைகளால் சுட்டு வீழ்த்தப்படுகின்றார். அவ்வாறு ஏற்பட்ட காயங்களே அவை என அவரிடம் கதை கேட்டவர்கள் புரிந்து கொள்கின்றனர். விருதுகள்1997 ஆஸ்கார் விருது
துணுக்குகள் |
Portal di Ensiklopedia Dunia