பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர்கள் இந்திய இராணுவத்தினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான பரம் வீர் சக்கரம் , 1999-ஆம் ஆண்டு முடிய 21 இந்திய இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது.[ 1] 14 பேருக்கு இந்த விருது வீரர்கள் இறந்த பிறகு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 விருதுகள் இந்தியத் தரைப்படை வீரர்களும் , ஒர் விருது இந்திய வான்படை வீரரும் பெற்றுள்ளார். இதில் இந்தியத் தரைப் படையின் கிரனேடியர்ஸ் எனும் எறிகணை வீச்சுப் படையினர் 3 விருதுகளும், கூர்க்கா ரைபிள்ஸ் ரெஜிமெண்ட் படையினர் 3 விருதுகளும் பெற்றுள்ளனர். இந்த விருது பெற்றவர்களின் மார்பளவுச் சிற்பங்கள் புது தில்லி தேசிய போர் நினைவகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[ 2]
மரபுரிமைகள்
அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு பெயர் சூட்டல்
இதுவரை அந்தமான் நிக்கோபரில் உள்ள பல தீவுகளுக்கு பெயர் சூட்டப்படாமல் இருந்தது. சனவரி 2023ல் இந்திய இராணுவத்தின் மிக உயரிய பரம் வீர் சக்கர விருது பெற்ற மேஜர் இராமசாமி பரமேஸ்வரன் உள்ளிட்ட 21 வீரத்தியாகிகளின் பெயர்களை அத்தீவுகளுக்கு சூட்டி இந்திய அரசு கௌரவம் செய்துள்ளது.[ 3] [ 4] [ 5]
பரம் வீர் சச்கர விருது பெற்றவர்கள் பட்டியல்
விருது பெற்றவரின் சிற்பம்
படை எண்
பெயர்
படையணி
நாள்
இடம்
குறிப்புகள்
IC-521
மேஜர் சோம்நாத் சர்மா
4வது படைப்பிரிவு, குமோன் படையணி
நவம்பர் 3, 1947
பத்காம், காசுமீர்
மறைவிற்குப் பின்
IC-22356
லான்ஸ் நாயக் கரம் சிங்
1வது படைப்பிரிவு, சீக்கியப் படையணி
அக்டோபர் 13, 1948
தித்வால், காசுமீர்
SS-14246
செகண்ட் லெப். இராமா ரகோபா ராணே
பொறியாளர் படை
ஏப்ரல் 8, 1948
நௌஷேரா, காசுமீர்
27373
நாயக் ஜாதுநாத் சிங்
1வது படைப்பிரிவு, ராஜ்புத் படைப்பிரிவு
பெப்ரவரி 1948
நௌஷேரா, காசுமீர்
மறைவுக்குப்பின்
2831592
ஹவில்தார் மேஜர் பிரு சிங் செகாவாத்
6-வது படைப்பிரிவு, ராசபுதனா துப்பாக்கிகள்
17 சூலை 1948–18 சூலை 1948
தித்வால், காசுமீர்
மறைவுக்குப்பின்
IC-8497
கேப்டன் குர்பச்சன் சிங் சலாரியா
3வது படைப்பிரிவு, முதலாம் கூர்க்கா துப்பாக்கிகள் (மாலௌன் படையணி)
திசம்பர் 5, 1961
லும்பாஷி (எலிசபெத்வில்) ,கடங்கா மாநிலம், கொங்கோ
மறைவுக்குப்பின்
IC-7990
மேஜர் தன்சிங் தாப்பா
1வது படைப்பிரிவு, 8வது கூர்க்கா துப்பாக்கிகள்
அக்டோபர் 20, 1962
லடாக் , இந்தியா
JC-4547
சுபேதார் ஜோகீந்தர் சிங்
1வது படைப்பிரிவு, சீக்கியப் படையணி
அக்டோபர் 23, 1962
டோங்பென் லா, வடகிழக்கு முன்னணி முகமை, இந்தியா
மறைவுக்குப்பின்
IC-7990
மேஜர் சைத்தான் சிங்
13வது படைப்பிரிவு, குமோன் படையணி
நவம்பர் 18, 1962
ரெசாங் லா
மறைவுக்குப்பின்
2639885
ஹவில்தார் அப்துல் ஹமித்
4வது படைப்பிரிவு, கிரெனேடியர்சு
செப்டம்பர் 10, 1965
சீமா, கேம் கரண் பகுதி
மறைவுக்குப்பின்
IC-5565
லெப்.கர்ணல் அர்தசிர் தாராபூர்
17வது பூனா குதிரைப்படை
அக்டோபர் 15, 1965
பில்லோரா , சியால்கோட் பகுதி, பாகிஸ்தான்
மறைவுக்குப்பின்
4239746
ஆல்பர்ட் எக்கா
14வது படைப்பிரிவு, பாதுகாவல் படைகள்
திசம்பர் 3, 1971
பிரம்மன்பரியா மாவட்டம் , வங்காளதேசம்
மறைவுக்குப்பின்
10877 F(P)
நிர்மல் சிங் செக்கோன்
18-ஆம் வான்படைப் பிரிவு, இந்திய வான்படை
திசம்பர் 14, 1971
ஸ்ரீநகர் , காசுமீர்
மறைவுக்குப்பின்
IC—25067
அருண் கேதார்பால்
17வது பூனா குதிரை
திசம்பர் 16, 1971
ஜார்பால், ஷகார்கர் பகுதி
மறைவுக்குப்பின்
IC-14608
கோசியார் சிங் தாகியா
3வது படைப்பிரிவு, கிரெனேடியர்சு
திசம்பர் 17, 1971
பசன்தர் ஆறு, ஷகார்கர் பகுதி
JC-155825
நயீப் சுபேதார் பானா சிங்
8வது படைப்பிரிவு, சம்மு காசுமீர் இலகு காலாட்படை
சூன் 23, 1987
சியாச்சென் பனியாறு, சம்மு காசுமீர்
IC-32907
மேஜர் பரமேஸ்வரன்
8வது படைப்பிரிவு, மஹர் படையணி
நவம்பர் 25, 1987
இலங்கை
மறைவுக்குப்பின்
IC-56959
மனோஜ் குமார் பாண்டே
1வது படைப்பிரிவு, 11வது கூர்க்கா துப்பாக்கிகள்
சூலை 3, 1999
காலுபெர்/ஜபெர் டாப், பதாலிக் பகுதி , கார்கில் வட்டாரம், சம்மு காசுமீர்
மறைவுக்குப்பின்
2690572
யோகேந்திர சிங் யாதவ்
18வது படைப்பிரிவு, கிரெனேடியர்சு
சூலை 4, 1999
டைகர் ஹில், கார்கில் வட்டாரம்
13760533
சஞ்சய் குமார்
13வது படைப்பிரிவு, சம்மு காசுமீர் துப்பாக்கிகள்
சூலை 5, 1999
ஏரியா பிளாட் டாப், கார்கில் வட்டாரம்
IC-57556
விக்கிரம் பத்ரா
13வது படைப்பிரிவு, சம்மு காசுமீர் துப்பாக்கிகள்
சூலை 6, 1999
முனை 5140, முனை 4875, கார்கில் வட்டாரம்
மறைவுக்குப்பின்
மேற்கோள்கள்
↑ "Param Vir Chakra winners since 1950 – Times of India" . Times of India . Archived from the original on 18 October 2016. Retrieved 27 September 2016 .
↑ "PARAM VIR CHAKRA Awardees" . Archived from the original on 2020-09-18. Retrieved 2020-09-29 .
↑ அந்தமானில் பிரதமரால் பெயரிடப்பட்ட தீவுகள்: யார் யார் அவர்கள்?
↑ அந்தமானில் 'ராமசுவாமி தீவு' - மோதி அறிவித்த பரம்வீர் சக்ரா தமிழ் அதிகாரிக்கு 35 வருடத்துக்கு பிறகு கெளரவம்
↑ PM Modi names 21 islands of Andaman and Nicobar Islands after Param Vir Chakra awardees
விருதாளர்கள் வடிவமைப்பாளர்