1985 காரைதீவு தமிழர் படுகொலைகள்
1985 கரைத்தீவில் தமிழ் எதிர்ப்பு படுகொலை (1985 anti-Tamil pogrom in Karaitivu) என்பது அம்பாறை மாவட்டம் கரைதீவில் உள்ள தமிழ் மக்கள் மீது இலங்கை பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் இலங்கை முசுலீம் கும்பல்களால் நிகழ்த்தபட்ட ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறையைக் குறிக்கிறது.[1][2][note 1] 1985 ஏப்ரலில், இலங்கை சனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன காரைதீவு (அம்பாறை) கிராமத்தில் உள்ள தமிழர்களைத் தாக்குவதற்காக எம். எச். மொகம்மதை தனது ஆதரவாளர்களுடன் அனுப்பினார்.[4][3] பாதுகாப்புப் படையினரின் ஆதரவுடன் 3000 இலங்கை முசுலிம் இளைஞர்களைக் கொண்ட கும்பல் பல தமிழர்களைக் கொன்றது, பல பெண்களைக் கற்பழித்தது, தமிழர்களின் 2000 இக்கும் மேற்பட்ட வீடுகளை எரித்தது, 15,000 தமிழர்களை வீடற்றவர்களாக ஆக்கியது.[5][4][6][7] கடைகளும் சூறையாடப்பட்டன. மேலும் பத்தினி கோயில் உட்பட பல இந்து கோயில்கள் அழிக்கப்பட்டன, அங்கு சிலைகள் உடைக்கப்பட்டன.[8] முசுலீம் பத்திரிகையாளர் காத்ரி இஸ்மாயில் கூற்றின்படி, ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 14 வரை நடந்த வன்முறையின் போது 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர் ஒரு மாதத்திற்கு முன்னர் அந்தப் பகுதிக்கு விஜயம் செய்திருந்தார், மேலும் இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபடுவதற்கு முசுலிம்களுக்கு போதுமான அளவு அச்சுறுத்தல் இருப்பதாக உணர்ந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை, இது அவர்களுக்கு பாதுகாப்பின்மையை மட்டுமே ஏற்படுத்தும்.[3] எவ்வாறாயினும், வன்முறைக்கு முந்தைய மாதங்களில் தமிழ் போராளிக் குழுக்கள் முசுலிம்களிடம் ஆக்ரோசமாக நடந்து கொண்டதாக மற்றவர்கள் குற்றம் சாட்டினர். 1984 ஆம் ஆண்டு முதல் கிழக்கு மாகாணத்தில் போராளிகள் முசுலிம்களிடம் கப்பம் பெறுதல் மற்றும் கடத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டனர். வடக்கில் தமிழர்களிடமிருந்து போராளிகள் பணத்தைப் பெற்றதை இது ஒத்ததாக இருந்தாலும், கிழக்கு முசுலிம்கள் இந்த நடவடிக்கைகளை மிகவும் வெளிப்படையாக எதிர்த்தனர். இது முசுலிம்களை தமிழர்களுக்கு எதிராக தூண்டுவதற்கான ஒரு வாய்ப்பாக அரசாங்கம் பயன்படுத்திக்கொண்டது.[9] 1985 ஏப்ரல் 12 இல் முஸ்லிம் அமைச்சர் ஏ. எல். ஏ. மஜீத் ஒரு வெளிப்புற சக்தி தாக்குதல்களை தூண்டியதாக குற்றம் சாட்டினார்:
அதேபோல், அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமான் “கொழும்பில் இருந்து கிழக்கு மாகாணத்துக்கு குண்டர்களை ஏற்றிக்கொண்டு 7 லொறிகளும், 2 ஜீப் வண்டிகளும் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்காக சென்றுள்ளன” என நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.[3] 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் நாள், அப்பகுதியில் மேலும் 27 தமிழ் பொதுமக்கள் இலங்கை சிறப்பு அதிரடிப்படையால் படுகொலை செய்யப்பட்டனர்.[5] மேலும் காண்ககுறிப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia