2017 கராச்சி தாக்குதல்
2017 கராச்சி தாக்குதல் (2017 Karachi stabbings) பாக்கித்தானின் சிந்துவின் கராச்சியில் அடையாளம் தெரியாத ஒரு நபரால் பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களாகும். 25 செப்டம்பர் 2017 அன்று இந்த பரபரப்பு தொடங்கியது. இதன் விளைவாக 16 பெண்கள் காயமடைந்தனர். ஆனால், அவர்களில் யாரும் அவனால் கொள்ளையடிக்கப்படவில்லை அல்லது கொல்லப்படவில்லை. தாக்குதல்கள்செப்டம்பர் 25 அன்று அந்த நபர் முதலில் மூன்று பெண்களை காயப்படுத்தினார். அவர் செப்டம்பர் 26 அன்று மேலும் இருவரை காயப்படுத்தினார். செப்டம்பர் 28 அன்று மற்றொருவரை காயப்படுத்தினார். ஹபீப் பல்கலைக்கழகத்திற்கும் இராடோ பேக்கரிக்கு இடையேயுள்ள ஜோஹர் சௌரங்கி முதல் பெகல்வான் கோத் வரையிலான பகுதிகளில் இவர்கள் தாக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.[1] அக்டோபர் 4 அன்று, குல்ஷன்-இ-ஜமால் முதல் குல்ஷன் சௌரங்கி வரையிலான பகுதிகளில் மூன்று மணி நேரத்திற்குள் ஐந்து பெண்கள் காயமடைந்தனர்.[2] [3] அக்டோபர் 16 அன்று, பெடரல் பி பகுதிக்கு அருகே ஒரு பெண் தாக்கப்பட்டார்.[4] [5] சில பெண்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அல்லது உள்ளூர் காவல் நிலையத்தை அவர்கள் அணுகிவில்லை. அவர்கள் புகார்களைத் தர மறுத்தனர்.[6] காவல் துறையினரின் தகவல்களின்படி, 16 பெண் குடிமக்கள் தாக்குதலில் பாத்திக்கப்பட்டனர்.[7] குற்றவாளிஒரே ஆடை அணிந்துவந்த ஒரே நபரால் இத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சில பாதிக்கப்பட்டவர்கள் கூறிய தலவல்களாலும், சிசிடிவி காட்சிகளில் தெரிந்த காட்சிகளின்படியும், சந்தேக நபர் 5 ′ 7–9 ″ உயரமும், 20-29 வயதுடைய மெல்லிய மனிதராகத் தோன்றுகிறார். அவர் கருப்பு அங்கியும் ஜீன்ஸ் கால் சராயும் அணிந்துள்ளார். அவர் தலைக்கவசம் அணிந்து சிவப்பு மோட்டார் சைக்கிளில் சவாரி செய்கிறார். மேலும் கூர்மையான பொருளைப் பயன்படுத்தி இடது கையால் ஒரு பெண்ணின் பின்னால் இருந்து தாக்கிவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தலைகவசம் அணியாமல் இருக்கும்போது அவரை பார்த்த்துள்ளார். அவர் சுருள் முடி கொண்டவராகவும் லேசான தாடியுடன் இருந்ததாக கூறினார்.[8] அவர் உளவியல் கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.[9] சிசிடிவி காட்சிகள் தரமற்றவை. அவை விசாரணைக்கு உதவவில்லை. தாக்குபவரின் முகமும் வாகனத்தின் பதிவெண்ணும் கண்டறிய மிகவும் கடினமாக இருந்தது.[10] [11] [12] தப்பிப்பிழைத்த அனைவரும் "கண்ணியமான உடையிலேயே" இருந்தனர். எனவே தாக்குதல்களில் பயங்கரவாதிகளின் தொடர்பு இருப்பதாக காவல் துறையினர் சந்தேககிக்கவில்லை.[13] இந்த தாக்குதல்கள் பீதியையும் பயத்தையும் பரப்பின. பல பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விரைவில், அந்த பகுதிகளில் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும், அப்பகுதி முழுவதும் ஆய்வு செய்ய உயர் எச்சரிக்கை பாதுகாப்பு அனுப்பப்பட்டது.[14] [15] இதைத் தொடர்ந்து, கராச்சி பல்கலைக்கழகத்தில் மாணவிகள் கூடுதல் பாதுகாப்பைக் கோரினர். அதனால் கல்லூரிக்கு அவர்களின் வருகை குறைவாக இருந்தது. அவர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக குறிப்பிட்ட்டப் பேருந்துகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டனர். மேலும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வாகனத்தில் செல்லும் போது தலைகவசம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. பெண்கள் வளாகத்தின் மீதான தாக்குதல்களின் செய்திகளை சரிபார்க்க ஒரு காவல்துறையினர் அடங்கிய குழுவும் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தது. எனினும், துணைவேந்தர் பேராசிரியர். டாக்டர் முஹம்மது அஜ்மல் கான் அறிக்கைகளை நிராகரித்தார்.[16] [17] [18] [19] [20] எதிர்வினைகள்அக்டோபர் 13 ஆம் தேதி, சாசாத் என்பவர் இத்தாக்குதலில் சந்தேக நபருக்கு நெருக்கமாக இருப்பதாகக் கூறி காவலர்கள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.[21] அக்டோபர் 15 அன்று, சச்சிவால் காவலர்கள் மண்டி பஹாவுதீனைச் சேர்ந்த வசீம் என்ற சந்தேக நபரை கராச்சி காவல்துறையின் உதவியுடன் கைது செய்தனர், சிச்சவத்னி பகுதியில் இதே போன்ற கத்தி தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பதாகக் கூறப்பட்டது. அங்கு 2013 முதல் மூன்று ஆண்டுகளில் 50 பெண்கள் காயமடைந்தனர்.[22] [23] [24] இருப்பினும், அக்டோபர் 16 அன்று கராச்சியில் நடந்த மற்றொரு தாக்குதலுக்குப் பிறகு, அவர் கராச்சி தாக்குதல்களில் ஈடுபடாமல் இருந்திருக்கலாம் என்று அவர் அறிவிக்கப்பட்டார்.[11] எனவே, சஹிவால், இராவல்பிண்டி இலாகூரில் இதே போன்ற தாக்குதல்களுக்கு பஞ்சாப் காவல் துறையினர் அவரை விசாரிக்க விரும்பினர்.[25] [26] [27] [28] இருப்பினும், நவம்பர் 14 அன்று, சாசாத் மீதான ஐந்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன. மேலும் ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.[29] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia