2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Tokyo 2020 Paralympic Games), மெய்வல்லுநர்களுக்கான பல்துறை விளையாட்டுப் போட்டிகள் பன்னாட்டு இணை ஒலிம்பிக் குழுவினரால் நடத்தப்படுகிறது. இப்போட்டிகள் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரத்தில் 24 ஆகஸ்டு 2021 முதல் 5 செப்டம்பர் 2021 வரை நடைபெறுகிறது.[2] இந்த இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஏற்கனவே டோக்கியோவில் நடைபெற்ற 2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து நடைபெறுவதாகும். விளையாட்டுகள்போட்டிகள்163 நாடுகளின் 4,535 மாற்றுத்திறன் படைத்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும், 2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் போட்டியில் 24 வகையான விளையாட்டுகளில் 539 வகையான இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகிறது. தற்போது இறகுப்பந்தாட்டம் மற்றும் டைக்குவாண்டோ போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் பாய்மரப் படகோட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகள் நீக்கப்பட்டுள்ளன.[3][4][5] இந்திய வீரர்கள்இந்த இணை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இந்தியாவின் சார்பில் மாரியப்பன் தங்கவேலு உள்ளிட்ட 54 மாற்றுத் திறன் படைத்த விளையாட்டு வீரர்கள் தடகளம், வில்வித்தை, இறகுப்பந்தாட்டம், மேசைப்பந்தாட்டம், குறி பார்த்துச் சுடுதல், டைக்குவாண்டோ, நீச்சல், பளு தூக்குதல் மற்றும் படகுப்போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள்.[6][7][8][9] இந்திய வீரர்கள் வென்ற பதக்கங்கள்1960-இல் தொடங்கப்பட்ட பாரா ஒலிம்பிக் போட்டிகளில், ({2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2021 டோக்கியோ பார-ஒலிம்பிக் போட்டிகளுக்கு]] முன்பு வரை இந்தியா மொத்தமாகவே 12 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது. ஆனால் இந்த முறை {2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2021 டோக்கியோ பார-ஒலிம்பிக் போட்டிகளில்]] இந்தியா 19 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் 24-வது இடத்தில் உள்ளது.[10][11] இந்திய வீரர்கள் 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்கள் வென்றனர்.[12]
நிறைவு விழாஜப்பான் தேசிய மைதானத்தில் நிறைவு விழா நிகழ்ச்சி 2021 செப்டம்பர் 5 அன்று நடைபெற்றது. முதலில் கடந்த 13 நாட்கள் நடந்த போட்டி நிகழ்ச்சிகளின் முக்கிய வீடியோ காண்பிக்கப்பட்டது. இசை, நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஜப்பான் நாட்டு தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன்பின், வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடந்தது. இரண்டு பதக்க்கங்களை வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏந்தி வந்தார். . நிறைவு விழாவின் போது நடன கலைஞர்கள் உற்சாகமாக நடனமாடினர். போட்டியை வெற்றிகரமாக நடத்திய ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நடன கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது. பின், பாராலிம்பிக் கொடி இறக்கப்பட்டு, வரும் 2024ல் நடக்கவுள்ள பாரிஸ் நகர நிர்வாகியிடம் ஒப்படைக்கப்பட்டது. டோக்கியோ பாராலிம்பிக் ஒருங்கிணைப்பு குழு தலைவர் சீகோ ஹஷிமோடோ, போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள், போட்டியை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். சிறப்புரையாற்றிய பன்னாட்டு பாராலிம்பிக் குழு தலைவர் ஆன்ட்ரூ பார்சன்ஸ், ஜப்பான் நகர மக்கள், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள், போட்டியில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின், டோக்கியோ பாராலிம்பிக் நிறைவு பெற்றதாக முறைப்படி அறிவித்தார். அடுத்த பாராலிம்பிக் பாரிசில் நடக்கும் என்று தெரிவித்தார். அதன்பின் பாராலிம்பிக் ஜோதி அணைக்கப்பட்டது. முடிவில் கண்கவர் வாணவேடிக்கையுடன் நிறைவு விழா நிகழ்ச்சி முடிந்தது.[29] பதக்கப்பட்டியல்* போட்டி நடத்தும் நாடு (ஜப்பான்) இதனையும் காண்கஅடிக்குறிப்புகள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia