2021 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
2024 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், அதிகாரப்பூர்வமாக XIV தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அழைக்கப்படும் விளையாட்டுப் போட்டிகள் பாக்கித்தானில், முதன்மையாக பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூரில் நடைபெறும் ஒரு முக்கிய பல்துறை விளையாட்டு நிகழ்வாக இருக்கும். பைசலாபாத், சியால்கோட், குஜ்ரான்வாலா [1] மற்றும் கராச்சி ஆகிய நான்கு நகரங்களில் இந்த விளையாட்டுகளை நடத்துவதற்கு அமைப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். விளையாட்டுப் போட்டிகள் 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [2] 2004 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் முதன் முறையாக பாக்கித்தான் நடத்துகின்ற போட்டியாகவும், இஸ்லாமாபாத்திற்கு வெளியே பாக்கித்தான் இந்த நிகழ்வை நடத்த இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். புரவலர் தேர்வுமாலத்தீவுடனான கூட்டுடன் 2021 ஆண்டின் விளையாட்டுப் போட்டியை நடத்த இலங்கை ஏலம் எடுத்ததாக 2019 ஆம் ஆண்டில் இலங்கை விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது. இருப்பினும், டிசம்பர் 2019 இல் தெற்காசிய ஒலிம்பிக் கவுன்சிலால் பாகிஸ்தான் விளையாட்டை நடத்தும் நாடாக அறிவிக்கப்பட்டது. [3] [4] [5] [6] டிசம்பர் 10 அன்று, பாக்கித்தான் ஒலிம்பிக் சங்கத் தலைவர் ஆரிஃப் ஹசன் விளையாட்டுப் போட்டிக்கான கொடியைப் பெற்றார். [7] [8] வளர்ச்சி மற்றும் முன்னேற்பாடுகள்போட்டிகள் நடைபெற உள்ள இடங்கள் மற்றும் உள்கட்டமைப்புவிளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான கட்டமைப்பிற்காக ரூபாய் 2 பில்லியன் பாக்கித்தான் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.[9] ஜூலை 2020 இல், தெற்காசிய விளையாட்டுக்களுக்காக ஒன்றி அரசு ரூ .3.5 பில்லியனுக்கும் அதிகமாக ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. [10] பாகிஸ்தான் ஒலிம்பிக் சங்கமானது இந்த விளையாட்டுகளை லாகூரில் அடிப்படையாகக் கொண்டு நடத்த விரும்புகிறது, அதே நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டுகளை மற்ற நகரங்களில் நடத்தவும் திட்டமிட்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் நாட்டின் முக்கியப் பகுதிகளாக உள்ளன. பளுதூக்குதல் மற்றும் மல்யுத்த போட்டிகளை நடத்த குஜ்ரான்வாலா பரிசீலிக்கப்பட்டு வருகிது. சியால்கோட் மற்றும் நரோவால் போன்ற இடங்கள் கைப்பந்து போட்டிகளை நடத்துவதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ளது. பைசலாபாத் எறிபந்தாட்டம் நடத்துவதற்காக பரிசீலனையில் உள்ளது, அதனுடன் கோஜ்ரா வளைதடிப் பந்தாட்டம் நடத்துவதற்குப் பரிசீலனையில் உள்ள இடமாகும். கசூர் ஒரு இடமாகவும் இருக்கலாம். சிந்து கராச்சியில் கால்பந்து போட்டியை ஏற்பாடு செய்ய பாக்கித்தான் ஒலிம்பிக் சங்கம் விரும்புகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. [11] மே 2020 இல், மர்தான், கைபர் பக்துன்க்வா தேர்ந்தெடுக்கப்பட ஒரு நகரமாக இல்லாவிட்டாலும், ஒரு உடற்பயிற்சி கூடத்தில் நிகழ்வுகளை நடத்துவதற்கு விருப்பத்தை தெரிவித்துள்ளது. [12] சையத் அலி ஷா, வடமேற்கு எல்லைப்புற மாகாண ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பெசாவர் நகரை விளையாட்டுகள் நடத்துவதற்கான நகரங்களில் ஒன்றாக சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். [13] விளையாட்டுகள்பங்கேற்கும் நாடுகள்இந்த விளையாட்டுப் போட்டிகளில் கீழ்க்காணும் ஏழு நாடுகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் காண்க
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia