அமெரிக்க திரைப்பட நிறுவனத்தின் 10 முதல் 10ஏ. எஃப். ஐ.யின் 10 முதல் 10 என்கிற பட்டியல் 10 தலைசிறந்த அமெரிக்க ஐக்கிய நாட்டு திரைப்படங்களை 10 பாரம்பரிய திரைப்பட வகைகளுக்குள் பட்டியலிடுகிறது.[1] அமெரிக்க திரைப்பட நிறுவனம் (ஏ. எஃப். ஐ.) வெளியிட்ட இந்த பட்டியல்கள் ஜூன் 17, 2008 ஆம் ஆண்டு சிபிஎஸ் தொலைக்காட்சியில் சிறப்பு தொலைக்காட்சி ஒளிபரப்பாக ஒளிபரப்பப்பட்டன. இந்த சிறப்பில் பல்வேறு நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் குறிப்பாக கிளின்ட் ஈஸ்ட்வுட், குவெண்டின் டேரண்டினோ, கிர்க் டக்ளஸ், ஹாரிசன் போர்ட், மார்ட்டின் ஸ்கோர்செசி, ஸ்டீவன் ஸ்பில்பேர்க், ஜோர்ச் லூகாஸ், ரோமன் போலான்ஸ்கி, மற்றும் ஜேன் ஃபோண்டா ஆகியோர் படங்களைப் பற்றிய தங்களது வியப்பு மற்றும் பாராட்டுகளையும், பட்டியலில் குறிப்பிடப்பட்ட படங்களுக்கு தங்கள் பங்களிப்பையும் பற்றி விவாதித்தனர். பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்ட மொத்தம் 500 திரைப்படங்களின் முழு பட்டியலானது அமெரிக்க திரைப்பட நிறுவனத்தின் இணையதளத்தில் கிடைக்கிறது. அமெரிக்க திரைப்பட நிறுவனத்தின் சிறப்பு பட்டியல்களில் இன்றைய தினம் வரை கடைசியாக வெளி வந்த பட்டியல் இதுதான்.[2] இயங்குபடம்ஏ. எஃப். ஐ.யின் விளக்கப்படி இயங்குபடம் வகை திரைப்படங்கள் என்பவற்றின் படங்களானவை முதன்மையாக கணினி அல்லது கையால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் திரைப்படங்களின் கதாபாத்திரங்களுக்கு நடிகர்கள் குரல் கொடுத்திருக்க வேண்டும்.
நீதியறை நாடகம்ஏ. எஃப். ஐ.யின் வரையறையின் படி நீதியறை நாடக திரைப்படங்கள் என்பவை ஒரு திரைப்படத்தின் கதைச் சுருக்கத்தில் நீதி துறையானது முக்கிய பங்கை வகிப்பதை குறிக்கும்.
காவியம்ஏ. எஃப். ஐ.யின் வரையறைப்படி காவியம் என்பது கடந்தகாலத்தை திரைப்பட பாணியிலான கதை மூலம் கூறுவது ஆகும்.
கற்பனைஏ. எஃப். ஐ.யின் வரையறைப்படி கற்பனை வகை என்பது கதாபாத்திரங்கள் கற்பனை சூழ்நிலைகளில் நடிப்பது அல்லது புவியின் இயல்பான விதிகளை மீறிய சூழ்நிலைகளில் நடிக்கும் திரைப்படங்களை குறிக்கும்.
தாதாஏ. எஃப். ஐ.யின் வரையறைப்படி தாதாக்கள் பற்றிய திரைப்படங்கள் என்ற வகையானது அமைப்பு ரீதியான குற்றங்கள் அல்லது வித்தியாசமான குற்றவாளிகளை நவீன சூழ்நிலையில் காட்டுவது போன்றவற்றை மையமாக கொண்டது ஆகும்.
மர்மம்ஏ. எஃப். ஐ.யின் வரையறைப்படி மர்மம் என்ற வகையானது ஒரு குற்றத்தின் தீர்வை சுற்றி நிகழும் கதைக்களத்தை கொண்டிருக்கும் திரைப்படங்கள் ஆகும்.
காதல் நகைச்சுவைஏ. எஃப். ஐ.யின் வரையறைப்படி காதல் நகைச்சுவை என்ற வகையானது காதலின் வளர்ச்சி நகைச்சுவையான சூழ்நிலைக்கு இட்டுச்செல்லும் படங்களை குறிப்பதாகும்.
அறிபுனைஏ. எஃப். ஐ.யின் வரையறைப்படி அறிபுனை என்ற வகையானது அறிவியல் முன்னேற்றத்துடன் கற்பனை ஊகங்களையும் இணைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் ஆகும்.
விளையாட்டுஏ. எஃப். ஐ.யின் வரையறைப்படி விளையாட்டு என்ற வகை திரைப்படங்களானவை கதாநாயகர்கள் விளையாட்டு வீரர்களாக நடிக்கும் திரைப்படங்கள் ஆகும்.
மேற்குஏ. எஃப். ஐ.யின் வரையறைப்படி மேற்கத்திய வகை திரைப்படங்களானவை அமெரிக்க மேற்குப் பகுதியில் கதைக்களம் நகரும் வகையில் புத்துணர்ச்சி, போராட்டம் மற்றும் புதிய எல்லைகளின் மறைவு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
உசாத்துணை
வெளி இணைப்புகள்பகுப்புகள் |
Portal di Ensiklopedia Dunia