இடயந்தெரா அமெரிக்கானா
இடயந்தெரா அமெரிக்கானா (தாவர வகைப்பாட்டியல்: Dianthera americana, American water-willow) என்பது முண்மூலிகைக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 207 பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, “இடயந்தெரா” பேரினத்தில், 41 இனங்கள் உள்ளன. அதில் ஒரு இனமாக, இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1753 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளதாக, இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியல் ஆய்கவக் குறிப்புக் கூறுகிறது.[4] வட அமெரிக்கா நாடுகளின் அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. மனித இனப்பெருக்க, நுரையீரல் மண்டல கோளாறுகளை சீர்செய்ய உதவும் மருத்துவ ஆய்வுகளில் இது பயனாகிறது.[5],[6] இத்தாவரயின்ம கனடிய ஆய்வுகளின்படி அழிந்து வரும் தாவரயினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[2][7] இது குறைவான நீர்நிலைகளில் வாழ்வதால் பல மீன் இனங்களுக்கும், பிற நீர்வாழ் உயிரிகளுக்கும் வாழிடமாக திகழ்கிறது. இத்தாவரயின்ம் அழிந்தால், அந்த நீர்வாழ் உபிரினங்களுக்கு வாழிடம் அரிதாகும்.[8] மேற்கோள்கள்
இதையும் காணவும் |
Portal di Ensiklopedia Dunia