இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம்
இந்திய அறிவியல் வளர்சிக் கழகம் (Indian Association for the Cultivation of Science) (IACS), இந்தியாவின் கொல்கத்தா நகரில் அமைந்துள்ள பழமையான ஆராய்ச்சிக் கழகம் ஆகும்.[2][3] இக்கழகம் பிரித்தானிய இந்தியாவில் அறிவியலை மாணவர்களிடையே ஊக்கப்படுத்தும் நோக்கில், 29 சூலை 1876 ஆம் ஆண்டில் மகேந்திர சர்கார் என்ற மருத்துவரால் துவக்கப்பட்ட இந்தியாவின் பழைமையான தன்னாட்சி கொண்ட அறிவியல் கழகம் ஆகும்.[4][5][6] தெற்கு கொல்கத்தாவின், ஜாதவ்பூர் நகரில் இவ்வறிவியல் கழகம் அமைந்துள்ளது.[7] தொடக்கத்தில் பௌதிகம், புவியியல், உயிரியல் ஆசியவற்றைக் கற்றுக்கொடுக்கும் நிறுவனமாக இருந்து, பின்னர் 1907- ஆம் ஆண்டில் பேராசிரியர் சீ. வீ. இராமன் சேரவே, விஞ்ஞான ஆராய்ச்சி நிலையமாக ஆயிற்று. இவ்வாராய்ச்சி வேலையில் பேராசிரியர் இராமனுக்கு டாக்டர் கே. எசு. கிருசுணனும் மற்றும் பல ஆராய்ச்சியாளரும் துணை செய்தனர். பேராசிரியர் என்ற பெயரால் முதன் முதலாக நியமிக்கப்பட்டவர் டாக்டர் கே. எசு. கிருசுணனாவார். தேவையான நூல்கள் நிறைந்த நூல் நிலையமும் துல்லியமான கருவிகள் கொண்ட தொழிற்கூடமும் இங்கு இருக்கின்றன. இந்நிறுவனம் தற்போது பட்டம் பெற்றவர்கள் செய்யும் ஆராய்ச்சிச் சாலையாக இருந்துவருகிறது.[8] பாடத்திட்டங்கள்இயற்பியல், வேதியல், உயிரியியல், ஆற்றலியல், பலபடிம(பாலிமர்) வேதியியல் போன்ற துறைகளில், முனைவர் படிப்பிற்கான அடிப்படை ஆராய்ச்சி கூடங்கள் கொண்டுள்ளது. சிறப்பு மிக்கவர்கள்
மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia