இந்திய தொழில்நுட்பக் கழகம் இந்தூர்
இந்திய தொழில்நுட்பக் கழகம் இந்தூர் (இ.தொ.க. இந்தூர், Indian Institute of Technology Indore ) மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்தூர் நகரிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள சிம்ரோல் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியாகும். இந்திய மனிதவள அமைச்சினால் 2008ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்படவிருந்து 2009 ஆம் ஆண்டு துவங்கவிருக்கும் இரு இ.தொ.கழகங்களில் ஒன்றாகும். இக்கழக கட்டமைப்பிற்கான அடிக்கல்லை மனிதவள அமைச்சர் அர்ச்சுன்சிங் 17 பிப்ரவரி 2009 அன்று நாட்டினார்.[1] 525 ஏக்கர் நிலத்தில் அமையவிருக்கிறது.இக்கட்டமைப்பு பயனுக்கு வரும்வரை 2009-2010 கல்வியாண்டு பாடங்கள் தேவிஅகில்யா விசுவவித்யாலயா வளாகத்தில் இ.தொக.மும்பை வழிகாட்டுதலில் இயங்கத் துவங்கியுள்ளது.[2] கல்வித் திட்டங்கள்தனது முதலாண்டில்,2009-2010, மூன்று பட்டப்படிப்பு திட்டங்களை வழங்குகிறது: ஒவ்வோரு பாடதிட்டத்திலும் 40 மாணவர்கள் முதலாண்டில் சேரவுள்ளனர். இ.தொ.க நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் அனைத்து இ.தொ.கவிற்கும் பொதுவாக ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. மிகவும் கடினமானதும் போட்டி மிகுந்ததுமான இத்தேர்வின் அடிப்படையில் பொறியியல் பட்டப்படிப்பு திட்டங்களுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். வரும் ஆண்டுகளில் மேலும் கூடுதல் கல்வித்திட்டங்களும் ஆய்வு திட்டங்களும் மற்ற இ.தொ.கழகங்களைப் போன்றே வகுக்கப்படும். மேலும் பார்க்கமேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia