இந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுஇந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழு (Viceroy's Executive Council), பிரித்தானிய இந்தியாவின் வைஸ்ராயின் தலைமையில் செயல்படும் குழு ஆகும். அமைச்சரவைப் போன்ற இந்நிர்வாகக் குழு, பிரித்தானிய இந்தியாவின் அரசுத் துறைகள் தொடர்பாக, இந்தியத் தலைமை ஆளுநருக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கும். இந்நிர்வாகக் குழு 1861 ஆண்டின் இந்திய கவுன்சில்கள் சட்டத்தின் படி, அமைக்கப்பட்டது. வரலாறுஇந்திய அரசுச் சட்டம் 1858ன் படி, பிரித்தானிய இந்தியாவை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்த பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியை கலைத்து விட்டு, ஆட்சி அதிகாரத்தை, பிரித்தானியப் பேரரசுக்கு மாற்றப்பட்டது. பிரித்தானியப் பேரரசின் சார்பாக, 1858ல் இந்திய துணைக்கண்டத்தின் ஆட்சி நிர்வாகத்தை மேற்கொள்ள வைஸ்ராயை நியமித்தனர். 1861 ஆண்டின் இந்திய கவுன்சில்கள் சட்டத்தின் படி, வங்காள மாகாண ஆளுநராக இருந்த இந்தியத் தலைமை ஆளுநர் எனப்படும் வைஸ்ராய்க்கு ஆட்சி நிர்வாகத்தில் ஆலோசனைகள் வழங்க ஐந்து பேர் கொண்ட அமைச்சரவை போன்ற நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. இவ்வைந்து உறுப்பினர்களில் மூவரை, பிரித்தானிய இந்தியாவின் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சரும்,[1], இருவரை பிரித்தானியப் பேரரசரும் நியமிப்பர் இவ்வைந்து நிர்வாகக் குழ உறுப்பினர்கள் உள்துறை, படைத்துறை, வருவாய்த்துறை, நீதித்துறை மற்றும் நிதித்துறைகளை கண்காணிப்பர். வைஸ்ராய் தலைமையிலான நிர்வாகக் குழுக் கூட்டங்களின் போது, இந்தியத் தலைமைப் படைத் தலைவர் சிறப்பு உறுப்பினராக கலந்து கொள்வார். 1861 இந்திய கவுன்சில்கள் சட்டத்தின் படி, நிர்வாகக் குழு எடுக்கும் முடிவுகளில், தலைமை ஆளுநர் தேவையான மாற்றங்கள் செய்ய அதிகாரம் உள்ளது. பின்னர் 1869ல் நிர்வாகக் குழுவின் ஐந்து உறுப்பினர்களையும் நியமிக்கும் அதிகாரம் பிரித்தானியப் பேரரசருக்கு மாற்றப்பட்டது. 1874ல் பொதுப்பணித் துறையை நிர்வகிக்க ஆறாவதாக ஒரு புதிய நிர்வாகக் குழு உறுப்பினர் நியமிக்கப்பட்டார். 1909 இந்திய அரசுச் சட்டத்தின் படி, ஒரு இந்தியரை, வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில் நியமிக்க, தலைமை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இதன் படி சத்யேந்திர பிரசன்னோ சின்ஹா என்ற இந்தியர் முதன்முதலாக நிர்வாகக் குழுவில் தலைமை ஆளுநரால் நியமிக்கப்பட்டார். 1919 இந்திய அரசுச் சட்டத்தின் படி, இந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் மூன்று இந்தியர்கள் நியமிக்கப்பட்டனர். தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் இந்தியர்கள் (1909 - 1940)
நிர்வாகக் குழு விரிவாக்கம் 1941 மற்றும் 19428 ஆகஸ்டு 1940ல் இந்தியத் தலைமை ஆளுநாக இருந்த விக்டர் ஹோப், இரண்டாம் லின்லித்கொ பிரபு என்பவர், தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் கூடுதல் இந்தியர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு, இந்திய தேசிய காங்கிரசு, அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சி மற்றும் இந்து மகாசபை போன்ற அரசியல் கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை இரண்டாம் உலகப் போரின் போது, போர் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, முப்பது பேர் கொண்ட தேசியப் பாதுகாப்புக் குழு நிறுவப்பட்டது. இக்குழுவில் சட்டமன்றங்கள் கொண்ட நான்கு இந்திய மாகாணங்கள் மற்றும் சுதேச சமஸ்தானங்களின் சார்பாக முப்பது உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவில், 50 விழுக்காடு இசுலாமியர்கள் கொண்டாதாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை, அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் முகமது அலி ஜின்னா முன் வைத்தார். ஆனால் இக்கோரிக்கையை தலைமை ஆளுநர் ஏற்கவில்லை. 2 சூலை 1942ல் வைஸ்ராயின் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை பனிரெண்டிலிருந்து 15 ஆக உயர்த்தப்பட்டது. இந்தியக் குடிமைப் பணி அதிகாரியும், இலண்டனில் தூதரக அதிகாரியாக இருந்த சர் மாலிக் பெரேஸ் கான் நூன் என்பவரை, தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் படைத்துறை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். சர் இராமசாமி முதலியார் மற்றும் ஜாம்நகர் மன்னர் திக்விஜய்சிங் ரஞ்சித்சிங் ஆகியோர் பிரித்தானியப் பேரரசின் போர்க்குழுவில், பிரித்தானிய இந்தியாவின் சார்பாக பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டனர். வைஸ்ராய் தலைமையிலான நிர்வாகக் குழு உறுப்பினர்கள்;[3][4]
இடைக்கால அரசு1946ல் அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழுவினர், இந்தியா இடைக்கால அரசில், வைஸ்ராய் மற்றும் தலைமைப் படைத் தலைவர் தவிர பிற துறை அமைச்சர்கள் அனைவரும் இந்தியர்களாக மட்டும் இருக்க வேண்டும் என பிரித்தானியப் பேரரசிடம் வலியுறுத்தினர். இதன் படி, வைஸ்ராய் வேவல் பிரபு, இந்தியர்கள் அடங்கிய 14 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை அமைக்க இந்திய அரசியல் கட்சிக்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்திய இடைக்கால அரசு 2 செப்டம்பர் 1946 முதல் செயல்படத் துவங்கியது. இடைக்கால அரசில் இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினர்கள் மட்டும் பதவியேற்றனர். அகில இந்திய முஸ்லீக் கட்சி 26 அக்டோபர் 1946 வரை இடைக்கால அரசில் பங்கேற்க மறுத்தனர். இந்தியப் பிரிவினைக்குப் பின் இடைக்கால அரசு முடக்கப்பட்டது. 15 ஆகஸ்டு 1947 அன்று இடைக்கால அரசின் அதிகாரங்கள் இந்திய ஒன்றியம் மற்றும் பாகிஸ்தான் ஒன்றியத்துடன் மாற்றப்பட்டது. இடைக்கால அரசின் துறைகளும், அமைச்சர்களும்
மேற்கோள்கள்
இதனையும் காண்க |
Portal di Ensiklopedia Dunia