ஊழல் மலிவுச் சுட்டெண்![]() ஊழல் மலிவுச் சுட்டெண் (Corruption Perceptions Index) என்பது டிரான்சிபரன்சி இண்ட்டர்நேசனல் (Transparency International) என்னும் அமைப்பால் உலக நாடுகளின் ஊழல் நிலையின் மதிப்பீடு ஆகும். ஊழல் என்பது தனிப்பட்ட இலாபத்துக்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது என்று இந்த அமைப்பு வரையறை செய்கிறது. 2003 இல் இருந்து இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. பொதுவாக வளர்ச்சி கூடிய நாடுகளில் (வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசுத்திரேலியா, நிப்பான்) ஊழல் குறைவாகவும், வளர்ச்சி குன்றிய நாடுகள் (ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா) ஊழல் அதிகமாக இருப்பதையும் அவதானிக்கலாம்.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia