இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.
கினோவா (Quinoa) (செனோபோடியம் கினோவா; /ˈkiːnwɑː/ or /kɪˈnoʊ.ə/, from Quechuakinwa or kinuwa)[2] நாயுருவி (அமரந்தேசியே) குடும்பத்தில் உள்ள ஒரு பூக்கும் தாவரமாகும். கினோவா புல்வகைத் தாவரமன்று; இது ஒரு போலி கூலவகையாகும். இது புதினா, நாயுருவி (அமரந்து) வகைத் தாவரங்களோடு உறவுடையதாகும். இது, அதன் உண்ணக்கூடிய விதைகளுக்காகப் பயிரிடப்படும் ஆண்டுச் செடிவகையாகும்; இந்த விதைகளில் மற்ற கூலங்களை விட கூடுதலான புரதமும் நார்ப்பொருளும் பி உயிர்ச்சத்துகளும் கனிமச் சத்துகளும் உள்ளன.[3] வடமேற்குத் தென் அமெரிக்காவில் ஆண்டிசு மலைத் தொடரில் தோன்றியுள்ளது.[4] இது முன்பு கால்நடைத் தீவனமாக 5200–7000 ஆண்டுகளுக்கு முன்னரே பயன்பட்டுள்ளது. இது 3000-4000 ஆண்டுகளுக்கு முன்னர் தான் மாந்தரின் உணவாக பொலீவியாவில் உள்ள பெரு படுகையின் தித்திகாக்கா ஏரியில் பயன்பட்டுள்ளது.[5]
இன்று, ஆண்டியன் பகுதி கினோவா பயிர் விளைச்சல் பெரும்பாலும் சிறிய பண்ணைகளாலும் கழகங்களாலும் செய்யப்படுகிறது. கினோவா பயிர்விளைச்சல் கென்யா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, மேலும் பல ஐரோப்பிய நாடுகள் உட்பட 70 நாடுகளில் செய்யப்படுகிறது.[6] வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கினோவா நுகர்வு கூடியுள்ளதால், கினோவா விலை 2006 இல் இருந்து 2013 க்குள் மும்மடங்கு ஏறியுள்ளது.[7][8]
தாவரவியல்
கினோவா விதைகள்சமைத்த சிவப்புக் கினோவா
விவரிப்பு
செனோபோடியம் கினோவா (Chenopodium quinoa) ஓர் இருவித்திலை ஆண்டுத் தாவரமாகும். இது வழக்கமாக ஒரு மீ முதல் இரு மீ உயரம் வரை வளர்கிறது. இது இயல்பாக ஒன்று விட்டு ஒன்றாக அமைந்தஅகன்ற தூள்பூத்த மயிர்க்கால்கள் உள்ள இலைமடல்கள் கொண்டதாகும். ளையுடனோ இல்லாமலோ. பயிரிடும்வகையைப் பொறுத்து இதன் நடுத்தண்டு கிளையுடனோ இல்லாமலோ அமையலாம். தண்டின் நிறம் பச்சை, சிவப்பு, ஊதா நிறங்களில் இமைகிறது. பூ மஞ்சரி தாவர மேல்நுனியிலோ இலைக் கக்கத்திலோ அமைகிறது. ஒவ்வொரு மஞ்சரியிலும் நடுவச்சு ஒன்று அமையும். இதில் இருந்து அமரந்து வடிவத்தில் இரண்டாம் அச்சு அமையலாம் அல்லது குஞ்ச வடிவத்தில் மூன்றாம் அச்சும் உருவாகலாம்.[9] The green hypogynous flowers have a simple perianth and are generally self-fertilizing.[9][10] இதன் பழத்தில் 2 மிமீ விட்டமுள்ள விதைகள் வெள்ளை, சிவப்பு, கருப்பு நிறங்களில் பயிரிடும்வகையைப் பொறுத்து அமைகின்றன].[11]
இயற்கைப் பரவல்
செனோபோடியம் கினோவா அதன் காட்டுவகையில் இருந்து அல்லது களைப்பயிரில் இருந்து பெரூவிய ஆண்டியப் பகுதியில் வீட்டினமாக்கப் பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.[12] இது பயிரிடப்படும் பகுதியிலேயே பயிரிடாத (செனோபோடியம் கினோவா வகையான மெலனோசுபெர்மம் வளர்கிறது; இவை முந்தைய காட்டுவகையில் இருந்தோ பயிரிடும்வகையில் இருந்தோ தோன்றியிருக்கலாம்.[13]
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்
கினோவாவில் 13% நீரும் 64% மாவுப்பொருளும் 14% புரதமும் 6% கொழுப்பும் உள்ளது. 100 கிராம் அளவு பச்சைக் கினோவாவில் 20% அல்லது அதற்கும் கூடுதலான அளவு புரதமும் நார்ப்பொருளும் பல பி உயிர்ச்சத்துகளும் 46% இலைச்சத்தும் கனிமச்சத்தும் மகனீசியமும் பாசுவரமும் மாங்கனீசும் அமைகின்றன.
கினோவா பசைமை அற்றது.[3] உயர்செறிவான புரதம் உள்ளதால் பயன்படுத்தலும் சமைத்தலும் எளிது. கட்டுபாடான சுற்றுச்சூழலில் உயர்விளைச்சல் வாய்ப்புள்ளது.[15] இது விண்வெளிச் சூழலில் நெடுநாள் வாழப் பயன்படுத்துவதற்காகத் தெரிவு செய்யப்பட்ட செய்முறைப் பயிராகும்.[16]
↑Kolata, Alan L. (2009). "Quinoa"(PDF). Quinoa: Production, Consumption and Social Value in Historical Context. Department of Anthropology, The University of Chicago.
↑Johnson DL, Ward SM (1993). "Quinoa". Department of Horticulture, Purdue University; obtained from Johnson, D.L. and S.M. Ward. 1993. Quinoa. p. 219-221. In: J. Janick and J.E. Simon (eds.), New crops. Wiley, New York. Retrieved 21 May 2013.
↑Abugoch, James L. E. (2009). Quinoa (Chenopodium quinoa Willd.): composition, chemistry, nutritional, and functional properties (Review). Advances in Food and Nutrition Research. Vol. 58. pp. 1–31. doi:10.1016/S1043-4526(09)58001-1. ISBN9780123744418. PMID19878856. {{cite book}}: |journal= ignored (help)
Cocozza, C.; Pulvento, C.; Lavini, A.; Riccardi, M.; d’Andria, R.; Tognetti, R. (2012). "Effects of increasing salinity stress and decreasing water availability on ecophysiological traits of quinoa (Chenopodium quinoa Willd.)". Journal of Agronomy and Crop Science199 (4): 229–240. doi:10.1111/jac.12012.
Pulvento, C; Riccardi, M; Lavini, A; d'Andria, R; Iafelice, G; Marconi, E (2010). "Field Trial Evaluation of Two Chenopodium quinoa Genotypes Grown Under Rain-Fed Conditions in a Typical Mediterranean Environment in South Italy". Journal of Agronomy and Crop Science196 (6): 407–411. doi:10.1111/j.1439-037X.2010.00431.x.
Pulvento, C.; Riccardi, M.; Lavini, A.; Iafelice, G.; Marconi, E.; d’Andria, R. (2012). "Yield and Quality Characteristics of Quinoa Grown in Open Field Under Different Saline and Non-Saline Irrigation Regimes". Journal of Agronomy and Crop Science198 (4): 254–263. doi:10.1111/j.1439-037X.2012.00509.x.
Gómez-Caravaca, A.M.; Iafelice, G.; Lavini, A.; Pulvento, C.; Caboni, M.; Marconi, E. (2012). "Phenolic Compounds and Saponins in Quinoa Samples (Chenopodium quinoa Willd.) Grown under Different Saline and Non saline Irrigation Regimens". Journal of Agricultural and Food Chemistry60 (18): 4620–4627. doi:10.1021/jf3002125. பப்மெட்:22512450.
Geerts, S; Raes, D; Garcia, M; Vacher, J; Mamani, R; Mendoza, J; Huanca, R; Morales, B et al. (2008). "Introducing deficit irrigation to stabilize yields of quinoa (Chenopodium quinoa Willd.)". Eur. J. Agron.28 (3): 427–436. doi:10.1016/j.eja.2007.11.008.
Geerts, S; Raes, D; Garcia, M; Mendoza, J; Huanca, R (2008). "Indicators to quantify the flexible phenology of quinoa (Chenopodium quinoa Willd.) in response to drought stress". Field Crop. Res.108 (2): 150–6. doi:10.1016/j.fcr.2008.04.008.