கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்
இங்கு காணப்படும் தனிச்சிறப்பு வாய்ந்த சதுப்பு நிலங்களில் பல்வேறு வகையான அரிய பறவையினங்களைக் காணலாம். இங்கு நரி, புள்ளி மான் போன்ற விலங்குகளையும் காணலாம். கைவிடப்பட்ட குதிரைகள்ஆங்கிலேயர்களால் வளர்க்கப்பட்டு இங்கே விட்டுவிடப்பட்ட முன்னாள் வளர்ப்புக் குதிரைகள் நாளடைவில் அடங்காமல் சுற்றித்திரியும், கான்வளர் குதிரைகள் இங்கு காணப்படுகின்றன. 1000 ஆண்டுகள் பழைமையான கலங்கரை விளக்கம்இங்கு 1000 ஆண்டுகள் பழைமையான சோழர் காலத்துக் கலங்கரை விளக்கம் ஒன்று சிதைந்த நிலையிற் காணப்படுகிறது.[1] 150 வகையான தாவரங்கள்இப்பகுதியின் காடுகள் வெப்பமண்டல உலர் பசுமைமாறா காடுகள் ஆகும். இக்காப்பகத்தில் 150 வகையான தாவர வகைகள் காணப்படுகின்றன[3]. விலங்குகள்இங்கு காணப்படும் விலங்குகள்: கலைமான், நரி, புள்ளி மான், காட்டுப்பன்றி, முயல், காட்டுக் குதிரைகள், ஆமை, குரங்கு. பல்வேறு வகையான பறவைகள்இவை தவிர இங்கு நூற்றுக்கும் கூடுதலான பறவை இனங்கள் காணப்படுகின்றன். பூநாரை போன்று பல்வேறு வகையான வட அரைக்கோளத்தை சேர்ந்த பறவைகள் ஆண்டு தோறும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் இங்கு வலசை வருகின்றன. அண்டார்டிக்காப் பகுதியில் இருந்தும் பறவைகள் இங்கு வருகின்றன [4]. இதர விவரம்இக்காப்பகம் சாலை வழியே நாகப்பட்டினத்தில் இருந்து 60 கி.மீ தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 110 கி.மீ தொலைவிலும் உள்ளது. இங்கு செல்வதற்கு நவம்பர் முதல் மார்ச், ஏப்ரல் வரை மிகவும் ஏற்ற காலமாகும்[3]. இதனையும் காண்கமேற்கோள்கள்
படிமங்கள்
|
Portal di Ensiklopedia Dunia