சுஜாதா (எழுத்தாளர்)
ஸ்ரீ. ரங்கராஜன் (Sujatha, 3 மே 1935 – 27 பெப்ரவரி 2008) சுஜாதா எனும் புனைப்பெயரில் பரவலாக அறியப்படும் தமிழில் எழுதிய ஓர் இந்தியப் புதின எழுத்தாளர் திரைக்கதை எழுத்தாளர் ஆவார்.இவர் 100க்கும் மேற்பட்ட புதினங்கள், 250 சிறுகதைகள், 10 அறிவியல் நூல்கள், 10 மேடை நாடகங்கள் ,ஒரு சில கவிதைகளை எழுதியுள்ளார்.இவர் தமிழ் இலக்கியத்தில் பரவலாக அறியப்படும் எழுத்தாளர்களில் ஒருவராகவும், ஆனந்த விகடன், குமுதம் மற்றும் கல்கி போன்ற தமிழ் இதழ்களில் தொடர்ந்து பங்களிப்பாளராகவும் இருந்தார்.மேலும், குமுதத்தின் ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றினார். பல தமிழ் படங்களுக்கு திரைக்கதைகள், வசனங்களையும் எழுதியுள்ளார். வாழ்க்கைக் குறிப்புசீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி தூய வளனார் கல்லூரியில் பி.எஸ்சி. (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் பி.இ. (மின்னணுவியல்) கற்றார். திருச்சி தூய வளனார் கல்லூரியில், அப்துல் கலாம், சுஜாதா இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள்.[சான்று தேவை] அதன் பின்னர் நடுவண் அரசுப் பணியில் சேர்ந்தார். டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டுகள், அரசுப் பணியில் இருந்த சுஜாதா, பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும், மேலும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார். அறிவியலை, ஊடகம் மூலமாக, மக்களிடம் கொண்டு சென்றதற்காக,இவரைப் பாராட்டி, 'தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம்'இவருக்கு 1993-ஆம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.[சான்று தேவை] மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணமாக இவர் இருந்தார்.[சான்று தேவை] இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா. இப்பொறியை உருவாக்கியதற்காக இவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.[சான்று தேவை] சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி, இவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது. புனைபெயர்இவருடைய, "இடது ஓரத்தில்" என்ற சிறுகதை 1962-ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா.கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, 'சுஜாதா'வைத், தன் புனைப்பெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். எனும் பெயரிலும் எழுதி வந்தார். ஆக்கங்கள்சுஜாதா இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்று பல பாணிகளிலும் வகைகளிலும் எழுதியுள்ளார். புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என இருநூறிற்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஒரு கவிதைத் தொகுப்பும் படைத்துள்ளார். புதினங்கள்அகரவரிசையில் . . .
குறும்புதினங்கள்
சிறுவர் இலக்கியம்
சிறுகதைத் தொகுப்புகள்
சிறுகதை மற்றும் குறும்புதினத் தொகுப்புகள்
கவிதைத் தொகுப்பு
நாடகங்கள்நீள்நாடகங்கள்
குறுநாடகங்கள்
கட்டுரைத் தொகுப்புகள்
வினா விடை
திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்
பணியாற்றிய திரைப்படங்கள்
மறைவுஉடல் நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுஜாதா சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 27, 2008 இரவு 9.30 மணியளவில் மறைந்தார். மறைந்த ரங்கராஜனுக்கு அரங்கபிரசாத், கேசவ பிரசாத் என இரு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். சுஜாதாவின் இறுதிச் சடங்குகள் 2008 பெப்ரவரி 29 அன்று சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெற்றன.[1],[1] மேற்கோள்கள்வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia